கற்பிட்டி - பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியிருந்த படகின் இன்ஜினை பழுதுபார்த்து, அதனை பரிசோதனை செய்யச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் களப்பில் மூழ்கிய இளைஞரை பிரதேசவாசிகள் மீட்டு சிகிச்சைக்காக கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
படகு கவிழ்ந்ததில் இளைஞன் பலி - கற்பிட்டியில் சம்பவம் கற்பிட்டி - பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியிருந்த படகின் இன்ஜினை பழுதுபார்த்து, அதனை பரிசோதனை செய்யச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.விபத்தில் களப்பில் மூழ்கிய இளைஞரை பிரதேசவாசிகள் மீட்டு சிகிச்சைக்காக கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அங்கு அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.