• Oct 01 2026

ஒரு ஐஸ்க்ரீம் 5 லட்சமா-இது என்ன ஸ்பெஷல்?

Ziya / Sep 30th 2026, 5:05 pm
image

ஐஸ்க்ரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்தமான இனிப்பு. ஆனால், ஒரு ஐஸ்க்ரீமின் விலை ரூ.5 லட்சத்துக்கும் அதிகம் என்றால் நம்ப முடிகிறதா?


ஜப்பானில் தயாரிக்கப்பட்ட ‘பியாகுயா’ (Byakuya) என்ற ஐஸ்க்ரீம், உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்க்ரீம் என்ற கின்னஸ் உலக சாதனையைப் பெற்றுள்ளது.


ஒரு பரிமாறலின் விலை 873,400 ஜப்பானிய யென். இது சுமார் 6,696 அமெரிக்க டொலர் மதிப்புடையதாக கின்னஸ் உலக சாதனை நிறுவனம் பதிவு செய்துள்ளது.


இந்த ஐஸ்க்ரீமில் சாதாரண ஐஸ்க்ரீமில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு பதிலாக மிகவும் அரிய மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


குறிப்பாக, இத்தாலியின் ஆல்பா பகுதியில் கிடைக்கும் வெள்ளை ட்ரஃபிள், உண்ணக்கூடிய தங்கத் தகடு, இயற்கையான உயர்தர சீஸ் மற்றும் சகே தயாரிப்பில் மீதமாகும் சகே லீஸ் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.


இதில் பயன்படுத்தப்படும் ஆல்பா வெள்ளை ட்ரஃபிள்தான் விலையை மிக அதிகமாக உயர்த்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். கின்னஸ் பதிவின்படி, அந்த ட்ரஃபிளின் விலை ஒரு கிலோவுக்கு சுமார் 20 லட்சம் ஜப்பானிய யென் வரை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விலையுயர்ந்த ஐஸ்க்ரீமை உருவாக்க, ஜப்பானின் ஒசாகாவில் உள்ள புதுமையான உணவு வகைகளுக்குப் பெயர் பெற்ற ‘RiVi’ உணவகத்தின் தலைமைச் சமையல்கலைஞர் தடாயோஷி யமடா பங்களித்துள்ளார்.


ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய உயர்தரப் பொருட்களை ஒரே இனிப்பில் இணைப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. சரியான சுவை மற்றும் அமைப்பை உருவாக்க ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.


‘பியாகுயா’ ஐஸ்க்ரீம் 2023 மார்ச் 25ஆம் திகதி, ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஷிபுயாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதன் விலையை அடிப்படையாகக் கொண்டு கின்னஸ் உலக சாதனை நிறுவனம் இதனை உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்க்ரீம் எனப் பதிவு செய்துள்ளது.


அதாவது, இது புதிதாக உருவான சாதனை அல்ல. பல ஆண்டுகளாக கின்னஸ் உலக சாதனைப் பதிவில் இடம்பெற்று வரும் ஐஸ்க்ரீம் இது.


ஒரு ஐஸ்க்ரீம் 5 லட்சமா-இது என்ன ஸ்பெஷல் ஐஸ்க்ரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்தமான இனிப்பு. ஆனால், ஒரு ஐஸ்க்ரீமின் விலை ரூ.5 லட்சத்துக்கும் அதிகம் என்றால் நம்ப முடிகிறதாஜப்பானில் தயாரிக்கப்பட்ட ‘பியாகுயா’ (Byakuya) என்ற ஐஸ்க்ரீம், உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்க்ரீம் என்ற கின்னஸ் உலக சாதனையைப் பெற்றுள்ளது.ஒரு பரிமாறலின் விலை 873,400 ஜப்பானிய யென். இது சுமார் 6,696 அமெரிக்க டொலர் மதிப்புடையதாக கின்னஸ் உலக சாதனை நிறுவனம் பதிவு செய்துள்ளது.இந்த ஐஸ்க்ரீமில் சாதாரண ஐஸ்க்ரீமில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு பதிலாக மிகவும் அரிய மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.குறிப்பாக, இத்தாலியின் ஆல்பா பகுதியில் கிடைக்கும் வெள்ளை ட்ரஃபிள், உண்ணக்கூடிய தங்கத் தகடு, இயற்கையான உயர்தர சீஸ் மற்றும் சகே தயாரிப்பில் மீதமாகும் சகே லீஸ் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.இதில் பயன்படுத்தப்படும் ஆல்பா வெள்ளை ட்ரஃபிள்தான் விலையை மிக அதிகமாக உயர்த்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். கின்னஸ் பதிவின்படி, அந்த ட்ரஃபிளின் விலை ஒரு கிலோவுக்கு சுமார் 20 லட்சம் ஜப்பானிய யென் வரை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விலையுயர்ந்த ஐஸ்க்ரீமை உருவாக்க, ஜப்பானின் ஒசாகாவில் உள்ள புதுமையான உணவு வகைகளுக்குப் பெயர் பெற்ற ‘RiVi’ உணவகத்தின் தலைமைச் சமையல்கலைஞர் தடாயோஷி யமடா பங்களித்துள்ளார்.ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய உயர்தரப் பொருட்களை ஒரே இனிப்பில் இணைப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. சரியான சுவை மற்றும் அமைப்பை உருவாக்க ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.‘பியாகுயா’ ஐஸ்க்ரீம் 2023 மார்ச் 25ஆம் திகதி, ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஷிபுயாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதன் விலையை அடிப்படையாகக் கொண்டு கின்னஸ் உலக சாதனை நிறுவனம் இதனை உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்க்ரீம் எனப் பதிவு செய்துள்ளது.அதாவது, இது புதிதாக உருவான சாதனை அல்ல. பல ஆண்டுகளாக கின்னஸ் உலக சாதனைப் பதிவில் இடம்பெற்று வரும் ஐஸ்க்ரீம் இது.

Advertisement

Advertisement

Advertisement