• Nov 26 2024

மட்டக்களப்பில் இருந்து பல்கலைக்கு தெரிவுசெய்யப்பட்டோர் எண்ணிக்கை உயர்வு....!

Sharmi / Jun 4th 2024, 8:59 am
image

வெளியான உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில் மட்டக்களப்பு  கல்வி வலயத்தின் சித்திவீதம் குறைவாக இருந்தாலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தில் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளரும் மாகாண கல்விப்பணிப்பாளருமான திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.

 மட்டக்களப்பு கல்வி பணிமனையில் நேற்றையதினம்(03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயமானது விஞ்ஞான துறை,பொறியில் தொழில்நுட்பம்,உயிரியல் தொழில்நுட்ப பிரிவு போன்றவற்றில் அதிகரித்த சதவீதத்தினை காட்டியுள்ளது.

அந்த வகையில் உயிரியல் விஞ்ஞானதுறையில் 2.93வீத வளர்ச்சியும், பொறியில் தொழில்நுட்ப பிரிவில் 12.8வீத வளர்ச்சியும் உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் 7.7வீத வளர்ச்சியும் கண்டிருக்கின்றது. இருந்தபோதிலும் இம்முறை பௌதீக விஞ்ஞான பிரிவில் 7.7வீத குறைவினையும் கலைப்பிரிவில் 7.4வீத குறைவினையும் வர்த்தக பிரிவில் 01வீத குறைவினையும் காட்டியுள்ளது.

இம்முறை உயர்தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயம் 2.9 வீத வீழ்ச்சியை கண்டிருக்கின்றது. இதற்கு காரணமாக கலைத்துறை பெறுபேறுகள் அமைந்திருக்கின்றது.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவன் ஏ.எஸ்.எம்.ஷபான் என்பவர் பொறியில் தொழில்நுட்ப பிரிவில் பரீட்சைக்கு தோற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினையும் அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தினையும் பெற்றிருக்கின்றார்.

2015ஆம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு இலங்கையின் அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்பித்துவைக்கப்பட்டபோதிலும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் முதலாவதாக மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளார்.

தற்போதைய கணிப்பின் படி மட்டக்களப்பு கல்வி வலயத்திருந்து 28மாணவர்கள் மருத்துவதுறைக்கும் 40மாணவர்கள் பொறியியல் துறைக்கும் வர்த்தக துறைக்கு 24மாணவர்களும்,சட்ட பீடத்திற்கு மூன்று மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக கலைத்துறையில் 31மாணவர்களும் பொறியியல் தொழில்நுட்ப துறையில் 10மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினை பெற்றுள்ளார்கள்.

பரீட்சை பெறுபேறுகளின் சித்தி வீதத்தில் வீழ்ச்சி கண்டாலும் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் தொகை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இருந்து பல்கலைக்கு தெரிவுசெய்யப்பட்டோர் எண்ணிக்கை உயர்வு. வெளியான உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில் மட்டக்களப்பு  கல்வி வலயத்தின் சித்திவீதம் குறைவாக இருந்தாலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தில் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளரும் மாகாண கல்விப்பணிப்பாளருமான திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்வி பணிமனையில் நேற்றையதினம்(03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.2023ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயமானது விஞ்ஞான துறை,பொறியில் தொழில்நுட்பம்,உயிரியல் தொழில்நுட்ப பிரிவு போன்றவற்றில் அதிகரித்த சதவீதத்தினை காட்டியுள்ளது.அந்த வகையில் உயிரியல் விஞ்ஞானதுறையில் 2.93வீத வளர்ச்சியும், பொறியில் தொழில்நுட்ப பிரிவில் 12.8வீத வளர்ச்சியும் உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் 7.7வீத வளர்ச்சியும் கண்டிருக்கின்றது. இருந்தபோதிலும் இம்முறை பௌதீக விஞ்ஞான பிரிவில் 7.7வீத குறைவினையும் கலைப்பிரிவில் 7.4வீத குறைவினையும் வர்த்தக பிரிவில் 01வீத குறைவினையும் காட்டியுள்ளது.இம்முறை உயர்தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயம் 2.9 வீத வீழ்ச்சியை கண்டிருக்கின்றது. இதற்கு காரணமாக கலைத்துறை பெறுபேறுகள் அமைந்திருக்கின்றது.மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவன் ஏ.எஸ்.எம்.ஷபான் என்பவர் பொறியில் தொழில்நுட்ப பிரிவில் பரீட்சைக்கு தோற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினையும் அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தினையும் பெற்றிருக்கின்றார்.2015ஆம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு இலங்கையின் அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்பித்துவைக்கப்பட்டபோதிலும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் முதலாவதாக மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளார்.தற்போதைய கணிப்பின் படி மட்டக்களப்பு கல்வி வலயத்திருந்து 28மாணவர்கள் மருத்துவதுறைக்கும் 40மாணவர்கள் பொறியியல் துறைக்கும் வர்த்தக துறைக்கு 24மாணவர்களும்,சட்ட பீடத்திற்கு மூன்று மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக கலைத்துறையில் 31மாணவர்களும் பொறியியல் தொழில்நுட்ப துறையில் 10மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினை பெற்றுள்ளார்கள்.பரீட்சை பெறுபேறுகளின் சித்தி வீதத்தில் வீழ்ச்சி கண்டாலும் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் தொகை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement