• May 16 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட்ட படுகொலைச் சம்பவங்களுக்கு உள்நாட்டு விசாரணை...! நம்பிக்கை இல்லை என்கின்றார் கோவிந்தன் எம்.பி...!samugammedia

Sharmi / Sep 11th 2023, 10:58 am
image

Advertisement

இந்த நாட்டிலே உள்நாட்டு விசாரணைக்கு நம்பிக்கை இல்லை என்பது தொடர்பில் பேராயர் ரஞ்சித் அவர்களுக்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் சரத் பொன்சேகா அவர்களுக்கும் ஏன் 2018 ஆம்  ஆண்டு குண்டு வெடிப்பு காலத்தில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கும் தெரியும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான  கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பந்தமாக விசாரித்துக்கொண்டிருந்த  CID விசாரணைக்கு பொறுப்பாக இருந்தவர் கூட 2019 ஆம் ஆண்டு கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக வரும்போது இந்த நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்தார். காரணம் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது அவரையும் விசாரணைக்கு அழைத்தவர் தனக்கு தன்னுடைய உயிருக்கு உத்தரவாதம் இருக்காது என்ற காரணத்தினால் அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கிறார். அவரும் பல உண்மைகளை கூறிக்கொண்டிருக்கின்றார்.

எங்களை பொறுத்த மட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இன்று (நேற்று)  காலையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கூட மட்டக்களப்பில் ஒரு ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருக்கிறார்கள். குற்றவாளிகள் தண்டிக்க பட வேண்டும் என்கின்ற கோஷம் அங்கு எழுப்பப்பட்டிருக்கின்றது. உண்மையிலே இந்த குற்றவாளிகள் சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கிடப்பட்டு அவர்களுக்கான தண்டனை கொடுக்க வேண்டும்.

அசாத் மௌலானாவின் கூற்றின் படி, அவரது அறிக்கையின்  படி அவர் குற்றம் சாட்டுபவர் குறிப்பாக கோத்தபாயராஜபக்ஷ அவர்களையும், அவரை ஜனாதிபதியாக கொண்டுவருவதற்காக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரையும் அதன் உறுப்பினர்களையும் பாவித்ததாக அவர் கூறியிருக்கிறார்.  அந்த வகையில் அவர்களுடன் இருந்து செயல்பட்ட அசாத் மௌலானா கூட  ஒரு குற்றவாளியாகத்தான் கருதப்படுவார்.

இந்த வகையில்  உள்நாட்டு விசாரணைகளுக்கு அப்பால் சர்வதேச விசாரணை வேண்டும் என்று கேட்பவர்கள் அரசியல் ரீதியாக தங்களை ஸ்திரப்படுத்திக்கொள்வதற்கு எதிர்வரும் ஆண்டு நடைபெறவிருக்கும்  ஜனாதிபதித் தேர்தலை எண்ணிக்கொண்டு ஜனாதிபதித் தேர்தலிலே  வெல்வதற்காக இந்த குண்டு வெடிப்பையும் மக்களது உயிர்களையும் வைத்து இந்த சித்து விளையாட்டு காட்டாமல் இந்த நாட்டிலே 2009 வரை கொல்லப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அத்தனை உயிர்களுக்கும் நியாயம் கிடைக்கவேண்டும்.

அது மாத்திரமல்ல தற்போது கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியிலே இருந்து சடலங்கள் மீட்கப்பட்டுக்கொண்டிருக்கிறது அவைகள் கூட இறுதிக்கட்டத்தில் சரணடைந்தவர்களது உடலங்களாக இருக்கும் என்ற ஐயப்பாடு இருக்கின்றது. எனவே அனைத்துக்கும் சர்வதேச விசாரணை வேண்டும் என்று தான் நாங்களும் கேட்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட்ட படுகொலைச் சம்பவங்களுக்கு உள்நாட்டு விசாரணை. நம்பிக்கை இல்லை என்கின்றார் கோவிந்தன் எம்.பி.samugammedia இந்த நாட்டிலே உள்நாட்டு விசாரணைக்கு நம்பிக்கை இல்லை என்பது தொடர்பில் பேராயர் ரஞ்சித் அவர்களுக்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் சரத் பொன்சேகா அவர்களுக்கும் ஏன் 2018 ஆம்  ஆண்டு குண்டு வெடிப்பு காலத்தில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கும் தெரியும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான  கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பந்தமாக விசாரித்துக்கொண்டிருந்த  CID விசாரணைக்கு பொறுப்பாக இருந்தவர் கூட 2019 ஆம் ஆண்டு கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக வரும்போது இந்த நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்தார். காரணம் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது அவரையும் விசாரணைக்கு அழைத்தவர் தனக்கு தன்னுடைய உயிருக்கு உத்தரவாதம் இருக்காது என்ற காரணத்தினால் அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கிறார். அவரும் பல உண்மைகளை கூறிக்கொண்டிருக்கின்றார்.எங்களை பொறுத்த மட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இன்று (நேற்று)  காலையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கூட மட்டக்களப்பில் ஒரு ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருக்கிறார்கள். குற்றவாளிகள் தண்டிக்க பட வேண்டும் என்கின்ற கோஷம் அங்கு எழுப்பப்பட்டிருக்கின்றது. உண்மையிலே இந்த குற்றவாளிகள் சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கிடப்பட்டு அவர்களுக்கான தண்டனை கொடுக்க வேண்டும். அசாத் மௌலானாவின் கூற்றின் படி, அவரது அறிக்கையின்  படி அவர் குற்றம் சாட்டுபவர் குறிப்பாக கோத்தபாயராஜபக்ஷ அவர்களையும், அவரை ஜனாதிபதியாக கொண்டுவருவதற்காக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரையும் அதன் உறுப்பினர்களையும் பாவித்ததாக அவர் கூறியிருக்கிறார்.  அந்த வகையில் அவர்களுடன் இருந்து செயல்பட்ட அசாத் மௌலானா கூட  ஒரு குற்றவாளியாகத்தான் கருதப்படுவார். இந்த வகையில்  உள்நாட்டு விசாரணைகளுக்கு அப்பால் சர்வதேச விசாரணை வேண்டும் என்று கேட்பவர்கள் அரசியல் ரீதியாக தங்களை ஸ்திரப்படுத்திக்கொள்வதற்கு எதிர்வரும் ஆண்டு நடைபெறவிருக்கும்  ஜனாதிபதித் தேர்தலை எண்ணிக்கொண்டு ஜனாதிபதித் தேர்தலிலே  வெல்வதற்காக இந்த குண்டு வெடிப்பையும் மக்களது உயிர்களையும் வைத்து இந்த சித்து விளையாட்டு காட்டாமல் இந்த நாட்டிலே 2009 வரை கொல்லப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அத்தனை உயிர்களுக்கும் நியாயம் கிடைக்கவேண்டும். அது மாத்திரமல்ல தற்போது கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியிலே இருந்து சடலங்கள் மீட்கப்பட்டுக்கொண்டிருக்கிறது அவைகள் கூட இறுதிக்கட்டத்தில் சரணடைந்தவர்களது உடலங்களாக இருக்கும் என்ற ஐயப்பாடு இருக்கின்றது. எனவே அனைத்துக்கும் சர்வதேச விசாரணை வேண்டும் என்று தான் நாங்களும் கேட்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement