முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறை பொலிஸ் பிரிவில் உள்ள கஜிவத்தை காட்டுப்பகுதியில் அனுமதியின்றி மரக் களஞ்சியம் ஒன்றை நடாத்தி,
குறித்த களஞ்சியத்தில் மரக்குற்றிகளை சேமித்து வைத்திருந்த கஜிவத்தை பிரதேசத்திற்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த களஞ்சியசாலையில் இருந்து பெருந்தொகையான மரத் துண்டுகளும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் (09) வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஏ.எஸ்.சந்திர பாலவின் பணிப்புரையின் கீழ் மன்னார் மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து குறித்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன்போது தேக்கு, முதிரை, பாலை போன்ற பல்வேறு வகை மர௩்களில் வெட்டப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சுமார் 1820 மரத் துண்டுகள் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் சந்தேக நபரும் மேலதிக நடவடிக்கைக்காக சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை சிலாபத்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
முசலி கஜிவத்தையில் அனுமதியின்றி மரக்களஞ்சியம் நடத்திவந்த அதிகாரி ஒருவர் கைது- பெருந்தொகை மரத் துண்டுகளும் மீட்பு முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறை பொலிஸ் பிரிவில் உள்ள கஜிவத்தை காட்டுப்பகுதியில் அனுமதியின்றி மரக் களஞ்சியம் ஒன்றை நடாத்தி, குறித்த களஞ்சியத்தில் மரக்குற்றிகளை சேமித்து வைத்திருந்த கஜிவத்தை பிரதேசத்திற்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த களஞ்சியசாலையில் இருந்து பெருந்தொகையான மரத் துண்டுகளும் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் (09) வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஏ.எஸ்.சந்திர பாலவின் பணிப்புரையின் கீழ் மன்னார் மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து குறித்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.இதன்போது தேக்கு, முதிரை, பாலை போன்ற பல்வேறு வகை மர௩்களில் வெட்டப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சுமார் 1820 மரத் துண்டுகள் கைப்பற்றப்பட்டன.கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் சந்தேக நபரும் மேலதிக நடவடிக்கைக்காக சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.மேலதிக விசாரணைகளை சிலாபத்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.