• Nov 26 2024

கைதிகளை சிறைச்சாலை திறந்தவெளியில் பார்வையிட சுதந்திர தினத்தில் சந்தர்ப்பம்..!samugammedia

Tharun / Feb 2nd 2024, 9:09 pm
image

76 ஆவது சுதந்திர தினத்தன்று 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கைதிகளை சிறைச்சாலை திறந்தவெளியில் பார்வையிடும் திட்டம் அமுல்படுத்தப்படும் என சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

அன்றைய தினம் சிறைச்சாலை விதிமுறைகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் ஒரு கைதியை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என மூவர் பார்வையிடும் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கைதியின் உறவினர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் உடைகளின் பொதி ஒருவருக்கு ஏற்ற அளவில் மட்டுமே கைதிக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், தடை செய்யப்பட்ட பொருட்களை சிறைச்சாலை வளாகத்துக்குள் கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைதிகளை சிறைச்சாலை திறந்தவெளியில் பார்வையிட சுதந்திர தினத்தில் சந்தர்ப்பம்.samugammedia 76 ஆவது சுதந்திர தினத்தன்று 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கைதிகளை சிறைச்சாலை திறந்தவெளியில் பார்வையிடும் திட்டம் அமுல்படுத்தப்படும் என சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.அன்றைய தினம் சிறைச்சாலை விதிமுறைகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் ஒரு கைதியை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என மூவர் பார்வையிடும் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.இதேவேளை, கைதியின் உறவினர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் உடைகளின் பொதி ஒருவருக்கு ஏற்ற அளவில் மட்டுமே கைதிக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், தடை செய்யப்பட்ட பொருட்களை சிறைச்சாலை வளாகத்துக்குள் கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement