கேகாலை – பலாங்கொடை, பின்னவல பகுதியில் தனது இரண்டு பிள்ளைகளை தாக்கியதாகக் கூறப்படும் 26 வயதுடைய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாட்டில் தொழில் நிமித்தம் சென்றுள்ள தனது மனைவி பணம் அனுப்பவில்லை என்றும், தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதில்லை என்றும் கூறி, குறித்த நபர் தனது 4 வயது மகளையும் 7 வயது மகனையும் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பிள்ளைகள் தாக்கப்பட்ட சம்பவத்தை காணொளியாக பதிவு செய்து, அதனை தனது மனைவிக்கு அனுப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தனது பிள்ளைகளை கொலை செய்யப் போவதாகவும் சந்தேகநபர் மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான இரு சிறார்களும் உடனடியாக மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வெளிநாட்டிலுள்ள மனைவி பணம் அனுப்பாததால் ஆத்திரம்; பிள்ளைகளை கொடூரமாக தாக்கிய தந்தை கேகாலை – பலாங்கொடை, பின்னவல பகுதியில் தனது இரண்டு பிள்ளைகளை தாக்கியதாகக் கூறப்படும் 26 வயதுடைய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.மத்திய கிழக்கு நாட்டில் தொழில் நிமித்தம் சென்றுள்ள தனது மனைவி பணம் அனுப்பவில்லை என்றும், தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதில்லை என்றும் கூறி, குறித்த நபர் தனது 4 வயது மகளையும் 7 வயது மகனையும் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், பிள்ளைகள் தாக்கப்பட்ட சம்பவத்தை காணொளியாக பதிவு செய்து, அதனை தனது மனைவிக்கு அனுப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன், தனது பிள்ளைகளை கொலை செய்யப் போவதாகவும் சந்தேகநபர் மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.தாக்குதலுக்கு உள்ளான இரு சிறார்களும் உடனடியாக மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.