• Dec 05 2024

அஞ்சலிதேவிக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் அழைப்பு!

Tamil nila / Dec 4th 2024, 6:52 am
image

மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் அஞ்சலிதேவி TIDயினரால் விசாரணைக்காக இன்று (04) அழைக்கப்பட்டுள்ளார்.

மூதூர் முன்னம்போடிவெட்டை பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நவரத்தினராசா அஞ்சலிதேவி (வயது 60) என்பவருக்கு திருகோணமலை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று  புதன்கிழமை காலை 10.00 மணியளவில் திருகோணமலை பழைய பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு வருகை தருமாறு எழுத்து மூலமாக அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நபர் கடந்த பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி திருகோணமலை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அஞ்சலிதேவிக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் அழைப்பு மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் அஞ்சலிதேவி TIDயினரால் விசாரணைக்காக இன்று (04) அழைக்கப்பட்டுள்ளார்.மூதூர் முன்னம்போடிவெட்டை பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நவரத்தினராசா அஞ்சலிதேவி (வயது 60) என்பவருக்கு திருகோணமலை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இன்று  புதன்கிழமை காலை 10.00 மணியளவில் திருகோணமலை பழைய பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு வருகை தருமாறு எழுத்து மூலமாக அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் குறித்த நபர் கடந்த பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி திருகோணமலை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement