• Nov 26 2024

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் அமைச்சர் கஞ்சன வெளியிட்ட அறிவிப்பு..!samugammedia

mathuri / Jan 9th 2024, 9:52 pm
image

மின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனை இதுவரை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்படவில்லை எனவும் எதிர்வரும் வாரமளவில் யோசனை முன்வைக்கப்படும். பொது மக்களின் கருத்து கோரலுடன் மின்கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இறுதி தீர்மானத்தை எடுக்கும் என   மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது,  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மொத்த சனத்தொகையில் வீட்டு மின்பாவனையாளர்கள் உட்பட 76 இலட்சத்து 3923 மின்பாவனையாளர்கள் அரச மற்றும் தனியார் மின்விநியோக கட்டமைப்பின் ஊடாக மின்சாரத்தை பெற்றுக்கொள்கிறார்கள்.

பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் மின்கட்டணம் செலுத்தாத 10 இலட்சத்து 64 ஆயிரத்து 400 மின்பாவனையாளர்களின் மின்கட்டணம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்படவில்லை. எதிர்வரும் வாரமளவில் யோசனை முன்வைக்கப்படும். பொது மக்களின் கருத்து கோரலுடன் மின்கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இறுதி தீர்மானத்தை எடுக்கும்.எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்டண திருத்தத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் மின்கட்டணம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மனுத்தாக்கல் செய்தமையை ஊடக காட்சிப்படுத்தல் என்று குறிப்பிட அவர் ஊடக காட்சிப்படுத்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவுக்கு எதிர்க்கட்சித், தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் பாரிய போட்டி நிலவுகிறது எனவும் குறிப்பிட்டார். 




மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் அமைச்சர் கஞ்சன வெளியிட்ட அறிவிப்பு.samugammedia மின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனை இதுவரை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்படவில்லை எனவும் எதிர்வரும் வாரமளவில் யோசனை முன்வைக்கப்படும். பொது மக்களின் கருத்து கோரலுடன் மின்கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இறுதி தீர்மானத்தை எடுக்கும் என   மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது,  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மொத்த சனத்தொகையில் வீட்டு மின்பாவனையாளர்கள் உட்பட 76 இலட்சத்து 3923 மின்பாவனையாளர்கள் அரச மற்றும் தனியார் மின்விநியோக கட்டமைப்பின் ஊடாக மின்சாரத்தை பெற்றுக்கொள்கிறார்கள்.பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் மின்கட்டணம் செலுத்தாத 10 இலட்சத்து 64 ஆயிரத்து 400 மின்பாவனையாளர்களின் மின்கட்டணம் துண்டிக்கப்பட்டுள்ளது.மின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்படவில்லை. எதிர்வரும் வாரமளவில் யோசனை முன்வைக்கப்படும். பொது மக்களின் கருத்து கோரலுடன் மின்கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இறுதி தீர்மானத்தை எடுக்கும்.எனவும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, கட்டண திருத்தத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் மின்கட்டணம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மனுத்தாக்கல் செய்தமையை ஊடக காட்சிப்படுத்தல் என்று குறிப்பிட அவர் ஊடக காட்சிப்படுத்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவுக்கு எதிர்க்கட்சித், தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் பாரிய போட்டி நிலவுகிறது எனவும் குறிப்பிட்டார். 

Advertisement

Advertisement

Advertisement