• Nov 24 2024

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு..!

Chithra / Mar 5th 2024, 7:28 am
image

தேசியத்துக்கும், பௌத்த மதத்துக்கும் அதேபோல் ஏனைய மதங்களுக்கும் முன்னுரிமை வழங்கும் நபர் தான் எங்களுடைய ஜனாதிபதி வேட்பாளர் என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்  தெரிவித்துள்ளார்.

குருநாகல் பகுதியில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆளும் தரப்பில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அடிப்படையற்றவை.

நாடாளுமன்றத்தில் பொதுஜன பெரமுனவின் வசம் பெரும்பான்மை பலம் உள்ள நிலையில் எதிர்க்கட்சி பக்கம் செல்ல வேண்டிய தேவை எமக்கில்லை.

ஜனாதிபதி தேர்தல் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. அரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுத்தேர்தலை நடத்துமாறு பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளதாக எதிர்தரப்பினர் குறிப்பிடுவது அடிப்படையற்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துமாறு நாங்கள் வலியுறுத்தவில்லை.எந்த தேர்தலை நடத்தினாலும் அதனை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம்.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதியாக களமிறக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். 

தேசியத்துக்கும்,பௌத்த மதத்துக்கும் அதேபோல் ஏனைய மதங்களுக்கும் முன்னுரிமை வழங்கும் நபரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு. தேசியத்துக்கும், பௌத்த மதத்துக்கும் அதேபோல் ஏனைய மதங்களுக்கும் முன்னுரிமை வழங்கும் நபர் தான் எங்களுடைய ஜனாதிபதி வேட்பாளர் என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்  தெரிவித்துள்ளார்.குருநாகல் பகுதியில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆளும் தரப்பில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அடிப்படையற்றவை.நாடாளுமன்றத்தில் பொதுஜன பெரமுனவின் வசம் பெரும்பான்மை பலம் உள்ள நிலையில் எதிர்க்கட்சி பக்கம் செல்ல வேண்டிய தேவை எமக்கில்லை.ஜனாதிபதி தேர்தல் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. அரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுத்தேர்தலை நடத்துமாறு பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளதாக எதிர்தரப்பினர் குறிப்பிடுவது அடிப்படையற்றது.ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துமாறு நாங்கள் வலியுறுத்தவில்லை.எந்த தேர்தலை நடத்தினாலும் அதனை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம்.பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதியாக களமிறக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். தேசியத்துக்கும்,பௌத்த மதத்துக்கும் அதேபோல் ஏனைய மதங்களுக்கும் முன்னுரிமை வழங்கும் நபரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement