• Nov 17 2024

'இயலும் இலங்கை' ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் அறிவிப்பு..!

Sharmi / Aug 27th 2024, 4:51 pm
image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் வியாழக்கிழமை(29) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்படவுள்ளது.

"இயலும் இலங்கை"  என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் இந்தக் கொள்கை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவித்து பொருளாதார சுபீட்சத்திற்கு இட்டுச் செல்வதற்கான அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், படிப்படியாக நாட்டை அபிவிருத்தியடைந்த நிலைக்கு கொண்டு செல்லும் திட்டங்களும் “புலுவன் இலங்கை” கொள்கை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இலங்கை மக்கள் அனைவருக்கும் நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்புவது "இயலும் இலங்கை"  என்ற கொள்கைப் பிரகடனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வரலாற்றில் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட இலங்கை படிப்படியாக மீண்டு வந்ததன் பின்னர் மற்றுமொரு அடியை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும்  தெரிவித்துள்ளார்.


'இயலும் இலங்கை' ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் அறிவிப்பு. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் வியாழக்கிழமை(29) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்படவுள்ளது."இயலும் இலங்கை"  என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் இந்தக் கொள்கை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவித்து பொருளாதார சுபீட்சத்திற்கு இட்டுச் செல்வதற்கான அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், படிப்படியாக நாட்டை அபிவிருத்தியடைந்த நிலைக்கு கொண்டு செல்லும் திட்டங்களும் “புலுவன் இலங்கை” கொள்கை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.இலங்கை மக்கள் அனைவருக்கும் நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்புவது "இயலும் இலங்கை"  என்ற கொள்கைப் பிரகடனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.வரலாற்றில் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட இலங்கை படிப்படியாக மீண்டு வந்ததன் பின்னர் மற்றுமொரு அடியை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement