அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் உபாலி பன்னிலகே நேற்று இதனை தெரிவித்தார்.
'பிரஜா சக்தி' தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் தொடக்க விழா இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அலரி மாளிகை வளாகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற உள்ளது எனவும் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலன்புரித் திட்டங்களையும் ஒருங்கிணைத்து அதனூடாக சமூகத்தை வலுவூட்டுதல் இதன் நோக்கமாகும்.
மத்திய அரசாங்கத்தின் முக்கியமான ஒன்பது அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண பிரதம செயலாளர்கள் இந்த செயற்திட்டத்தை ஒன்றிணைந்து முன்னெடுக்கவுள்ளனர்.
அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெற மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பம் அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் உபாலி பன்னிலகே நேற்று இதனை தெரிவித்தார்.'பிரஜா சக்தி' தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் தொடக்க விழா இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அலரி மாளிகை வளாகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற உள்ளது எனவும் தெரிவித்தார். அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலன்புரித் திட்டங்களையும் ஒருங்கிணைத்து அதனூடாக சமூகத்தை வலுவூட்டுதல் இதன் நோக்கமாகும்.மத்திய அரசாங்கத்தின் முக்கியமான ஒன்பது அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண பிரதம செயலாளர்கள் இந்த செயற்திட்டத்தை ஒன்றிணைந்து முன்னெடுக்கவுள்ளனர்.