• Oct 13 2026

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல் – பிணை தொடர்பில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Chithra / Oct 13th 2026, 3:13 pm
image


‘சிரிலிய சவிய’ மோசடி தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதற்பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 16ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.


குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதன்போது, ஷிரந்தி ராஜபக்ஷ சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முன்வைத்த சமர்ப்பணங்களை நீதவான் பரிசீலித்துள்ளார்.


இதனையடுத்து, சந்தேகநபரின் மேலதிக மருத்துவ அறிக்கைகளை எதிர்வரும் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


அத்துடன், குறித்த மருத்துவ அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் வரை ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு பிணை வழங்குவது தொடர்பான உத்தரவைப் பிறப்பிக்கப்போவதில்லை என்றும் நீதவான் அறிவித்துள்ளார்.


இதற்கமைய, ஷிரந்தி ராஜபக்ஷவின் பிணை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், அதுவரை அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார்.

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல் – பிணை தொடர்பில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ‘சிரிலிய சவிய’ மோசடி தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதற்பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 16ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்போது, ஷிரந்தி ராஜபக்ஷ சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முன்வைத்த சமர்ப்பணங்களை நீதவான் பரிசீலித்துள்ளார்.இதனையடுத்து, சந்தேகநபரின் மேலதிக மருத்துவ அறிக்கைகளை எதிர்வரும் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.அத்துடன், குறித்த மருத்துவ அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் வரை ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு பிணை வழங்குவது தொடர்பான உத்தரவைப் பிறப்பிக்கப்போவதில்லை என்றும் நீதவான் அறிவித்துள்ளார்.இதற்கமைய, ஷிரந்தி ராஜபக்ஷவின் பிணை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், அதுவரை அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement