இலங்கை மின்சார சபையினால், 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மின்சார கட்டணத்தை 13.56சதவீதத்தால் அதிகரிக்க முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானமானது, அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதியை மீறும் செயல் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, மீண்டும் ஒருமுறை, மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்போம் என்ற அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் மேடைகளில் வழங்கிய தேர்தல் வாக்குறுதியை நேரடியாக மீறுவதாக, இத் தீர்மானம் அமைந்துள்ளதாக சஜித் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் இவ்வாறு பொய்களால் மக்களை ஏமாற்றுவதை நிறுத்தி, அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய வாக்குறுதியை எப்போது நிறைவேற்றுவார் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை தற்சமயத்தில் நமது நாட்டில் அரச சேவையில் உயர் தகுதி பெற்ற பலர் கீழ் உழைப்புச் சேவையில் பணிபுரிந்து வருகின்றனர். கீழ் உழைப்புச் சேவை பட்டதாரிகளுக்கு நாட்டின் இலவசக் கல்வி முறையில் கற்பித்தல் சேவைக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
ஆசிரியர் சேவையில் இணைந்து கொள்வதற்கான செல்லுபடியாகும் பட்ட தகுதி திகதியை 2025 டிசம்பர் 31 வரை நீடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்றும் கூட, இளமானி மற்றும் முதுமானி பட்டங்களைப் பெற்று, அரச சேவையில் அலுவலக உதவியாளர்களாக, தொழிலாளர்களாக, ஆய்வக உதவியாளர்களாக பணிபுரிவோர் ஏராளமாக காணப்படுகின்றனர்.
இவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. அரச சேவையில் கீழுழைப்புச் சேவையில் பணி புரிந்து வரும் பட்டதாரிகளுக்கு, பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடத்தப்படும் போட்டிப் பரீட்சையில் விண்ணப்ப காலம் 19 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இதற்கு முன் இவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மீண்டும் மின் கட்டண உயர்வு காற்றில் பறந்த ஜனாதிபதியின் வாக்குறுதி - சஜித் குற்றச்சாட்டு இலங்கை மின்சார சபையினால், 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மின்சார கட்டணத்தை 13.56சதவீதத்தால் அதிகரிக்க முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானமானது, அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதியை மீறும் செயல் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, மீண்டும் ஒருமுறை, மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்போம் என்ற அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் மேடைகளில் வழங்கிய தேர்தல் வாக்குறுதியை நேரடியாக மீறுவதாக, இத் தீர்மானம் அமைந்துள்ளதாக சஜித் கூறியுள்ளார்.தொடர்ந்தும் இவ்வாறு பொய்களால் மக்களை ஏமாற்றுவதை நிறுத்தி, அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய வாக்குறுதியை எப்போது நிறைவேற்றுவார் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.இதேவேளை தற்சமயத்தில் நமது நாட்டில் அரச சேவையில் உயர் தகுதி பெற்ற பலர் கீழ் உழைப்புச் சேவையில் பணிபுரிந்து வருகின்றனர். கீழ் உழைப்புச் சேவை பட்டதாரிகளுக்கு நாட்டின் இலவசக் கல்வி முறையில் கற்பித்தல் சேவைக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆசிரியர் சேவையில் இணைந்து கொள்வதற்கான செல்லுபடியாகும் பட்ட தகுதி திகதியை 2025 டிசம்பர் 31 வரை நீடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்றும் கூட, இளமானி மற்றும் முதுமானி பட்டங்களைப் பெற்று, அரச சேவையில் அலுவலக உதவியாளர்களாக, தொழிலாளர்களாக, ஆய்வக உதவியாளர்களாக பணிபுரிவோர் ஏராளமாக காணப்படுகின்றனர். இவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. அரச சேவையில் கீழுழைப்புச் சேவையில் பணி புரிந்து வரும் பட்டதாரிகளுக்கு, பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடத்தப்படும் போட்டிப் பரீட்சையில் விண்ணப்ப காலம் 19 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இதற்கு முன் இவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.