• Nov 24 2024

முன்னாள் அமைச்சர்களுக்கு காலக்கெடு விதித்துள்ள அநுர அரசு!

Chithra / Sep 27th 2024, 11:18 am
image

 

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தமது ஆட்சிக் காலத்தில் பயன்படுத்திய அனைத்து அரச வீடுகள் மற்றும் பங்களாக்களை உடனடியாக ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சு, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எழுத்து மூலம் இன்று அறிவித்துள்ளது.

15 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஏற்கனவே அரச வீடுகள் மற்றும் பங்களாக்களை ஒப்படைப்பது குறித்து விசாரணை நடத்தியதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பல நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கிய கொழும்பு அரச பங்களாக்களின் எண்ணிக்கை 50 ஆகும்.

இதேவேளை, பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி வரை முன்னாள் உறுப்பினர்கள் மாதிவெல குடியிருப்பைப் பயன்படுத்துவதற்கு நாடாளுமன்றத் தலைவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் அன்றோ அல்லது நாளை மறுதினமோ மீண்டும் வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என நாடாளுமன்றத் தலைவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்று அறிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான கொடுப்பனவுகள், கட்டணம் மற்றும் ஏனைய வசதிகள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம் இரத்து செய்யப்பட்டன.

முன்னாள் அமைச்சர்களுக்கு காலக்கெடு விதித்துள்ள அநுர அரசு  முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தமது ஆட்சிக் காலத்தில் பயன்படுத்திய அனைத்து அரச வீடுகள் மற்றும் பங்களாக்களை உடனடியாக ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.பொது நிர்வாக அமைச்சு, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எழுத்து மூலம் இன்று அறிவித்துள்ளது.15 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஏற்கனவே அரச வீடுகள் மற்றும் பங்களாக்களை ஒப்படைப்பது குறித்து விசாரணை நடத்தியதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பல நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கிய கொழும்பு அரச பங்களாக்களின் எண்ணிக்கை 50 ஆகும்.இதேவேளை, பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி வரை முன்னாள் உறுப்பினர்கள் மாதிவெல குடியிருப்பைப் பயன்படுத்துவதற்கு நாடாளுமன்றத் தலைவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.நாடாளுமன்ற தேர்தல் அன்றோ அல்லது நாளை மறுதினமோ மீண்டும் வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என நாடாளுமன்றத் தலைவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்று அறிவித்துள்ளனர்.நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான கொடுப்பனவுகள், கட்டணம் மற்றும் ஏனைய வசதிகள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம் இரத்து செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement