நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் நகரை பாதுகாப்பதற்கு யுனெஸ்கோவின் தலையீடு பாராட்டப்பட வேண்டியது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அநுராதபுரம் இலங்கைக்கு மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்து எனவும் பிரதமர் தெரிவித்தார்.
இலங்கையில் உலகப் பாரம்பரியச் சின்னமாக விளங்கிய அநுராதபுர நகரத்தைப் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறை என்ற தொனிப்பொருளில் பிரான்சில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச நிபுணர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யுனெஸ்கோவினால் இலங்கையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு, கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உலக பாரம்பரிய தளமான அநுராதபுரத்தைப் பாதுகாப்பதற்கான நிலையான உத்திகள் குறித்து கலந்துரையாடுவதற்காக சர்வதேச நிபுணர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
அநுராதபுரம் இலங்கைக்கு மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்து யுனெஸ்கோ மாநாட்டில் பிரதமர் தெரிவிப்பு நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் நகரை பாதுகாப்பதற்கு யுனெஸ்கோவின் தலையீடு பாராட்டப்பட வேண்டியது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.அநுராதபுரம் இலங்கைக்கு மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்து எனவும் பிரதமர் தெரிவித்தார்.இலங்கையில் உலகப் பாரம்பரியச் சின்னமாக விளங்கிய அநுராதபுர நகரத்தைப் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறை என்ற தொனிப்பொருளில் பிரான்சில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச நிபுணர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.யுனெஸ்கோவினால் இலங்கையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு, கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உலக பாரம்பரிய தளமான அநுராதபுரத்தைப் பாதுகாப்பதற்கான நிலையான உத்திகள் குறித்து கலந்துரையாடுவதற்காக சர்வதேச நிபுணர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.