• Apr 04 2025

மீளப்பெற முடியாத சமஷ்டி அதிகாரப் பகிர்வுக்கு ஒத்துழைப்பை வழங்குங்கள்: மோடியிடம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை..!

Sharmi / Apr 3rd 2025, 11:19 am
image

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த  பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குங்குமாறு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வர இருக்கிற நிலைமையில் தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழங்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென பிரதமருக்கான மகஜரொன்றை யாழ் இந்திய தூதரகத்தில் இன்று கையளித்தனர்.

இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இதனைத்  தெரிவித்துள்ளனர்.

அந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2025 சித்திரை மாதம் மூன்றாம் திகதியாகிய இன்று, இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் இயங்கும் சிவில் அமைப்புகளின் வலைப்பின்னலான வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஆகிய நாம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம், இலங்கையின் நீண்டகால தேசியப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு இந்திய அரசின் பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஒரு நட்பான அயல் நாடு எனும் வகையில் இலங்கையின் நெருக்கடி காலங்களில் இந்தியா எப்போதும் உதவிக்கு வருகிறது. 

2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய மாபெரும் பங்களிப்பை நாம் எப்போதும் நன்றியுடன் நினைவிற் கொண்டுள்ளோம்.

அவ்வாறே, 1980களில் இலங்கையின் தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடுவராக இந்தியா ஆற்றிய வகிபாகத்தையும் நினைவிற் கொண்டுள்ளோம்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட பதின்மூன்றாவது திருத்தச் சட்டமானது குறிப்பீட்ட சில உரிமைகளை இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் பேசும் மக்களுக்கும் ஒட்டுமொத்த இலங்கைக்கும் உறுதிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மாகாண ஆட்சி வழங்கப்பட்டது

அத்துடன் தமிழ் மொழியானது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அலுவல்கள் மற்றும் நிர்வாக மொழியாக ஏற்கப்பட்டுள்ளது.

மேலும் மாகாண உயர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு அவற்றுக்கு மேன்முறையீட்டு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரதான நோக்கமானது, தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதும், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதுமாகும். எனினும், 13 வது திருத்தச் சட்டமானது வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த மக்களுக்கு இறையாண்மை உரிமைகளுடன் கூடிய நிலையான அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தவில்லை.

இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியானவர் தனது மீயுயர் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாகாண ஆட்சியை செயலிழக்க செய்ய முடியும் என்பது இந்த மாகாண ஆட்சி முறைமையின் இன்னொரு  மட்டுப்படுத்தலாகும்.

ஒரு தூரதிஷ்டவசமான நிகழ்வாக, இலங்கையின் உச்ச நீதிமன்றமானது 2006 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பாவது "செல்லுபடியற்றதும் சட்டவிரோதமானதும்" எனப் பிரகடனப்படுத்தியது. 

இது இந்தப் பிரதேசத்தைச் சார்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் அரசியல் பின்னடைவாகும்.

13 வது திருத்த சட்டம் இலங்கையின் அரசியல் அமைப்பில் உளிவாங்கப்பட்டு 35 வருடங்கள் கடந்து விட்ட இந்த இடைப்பட்ட காலத்தில், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று, 2009ஆம் ஆண்டு முடிவுற்றது.

போரின் போதும் போர் முடிவுற்ற உடனடிக் கால கட்டத்திலும் பொதுமக்கள் மீது பாரதூரமான மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தாததுடன் இராணுவ மயமாக்கலையும், சிங்கள் காலணித்துவத்தையும், பௌத்தமயமாக்கலையும் விரிவாக்கினர்.

அத்துடன் தமிழ் பேசும் மக்களின் மொழியுரிமை மற்றும் கலாசார உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. 

அர அனுசரணையுடன் கூடிய பல்வேறுபட்ட அச்சுறுத்தல்களும் அந்துமீறல்களும் தொடர்கின்றன.

இந்த பிரதேசங்களைச் சர்ந்த தமிழ் பேசும் மக்களின் அரசியல், சமூக, கலாசார, பொருளாதார உரிமைகள் அரச கொள்கைகளாலும் நடைமுறைகளாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

எமது கடந்தகால மற்றும் நிகழ்கால அனுபலங்களின் அடிப்படையில், 13வது திருத்தச் சட்டத்தில் காணப்படும் அதிகாரப் பகிர்வு முறையானது நிலைபேறானதல்ல எந்த நேரத்திலும் இலங்கை அரசானது மாகாண அதிகாரத்தை மீளப்பெற முடியும். 

எனவே, வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் பேசும் மக்கள் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு முறையே எமக்கு கௌரமமான உரிமைகளுடன் கூடிய வாழ்வை உறுதிப்படுத்தக் கூடிய நிலைபேறான ஒரே முறைமை என்று திடமாக நம்புகிறோம்.

அந்தவகையில் தங்களுக்கு நல்வரவு கூறுவதுடன் இலங்கைக்கான தங்களின் உத்தியோகபூர்வ வருகையை நாம் உலர்வாக கௌரவிப்பதுடன், இலங்கையில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுந்த தங்களின் பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குமாறு இந்த பகிரங்க வேண்டுகோளை முன்வைக்கிறோம் என்றுன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீளப்பெற முடியாத சமஷ்டி அதிகாரப் பகிர்வுக்கு ஒத்துழைப்பை வழங்குங்கள்: மோடியிடம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை. இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த  பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குங்குமாறு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வர இருக்கிற நிலைமையில் தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழங்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென பிரதமருக்கான மகஜரொன்றை யாழ் இந்திய தூதரகத்தில் இன்று கையளித்தனர்.இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இதனைத்  தெரிவித்துள்ளனர். அந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,2025 சித்திரை மாதம் மூன்றாம் திகதியாகிய இன்று, இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் இயங்கும் சிவில் அமைப்புகளின் வலைப்பின்னலான வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஆகிய நாம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம், இலங்கையின் நீண்டகால தேசியப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு இந்திய அரசின் பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கிறோம்.ஒரு நட்பான அயல் நாடு எனும் வகையில் இலங்கையின் நெருக்கடி காலங்களில் இந்தியா எப்போதும் உதவிக்கு வருகிறது. 2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய மாபெரும் பங்களிப்பை நாம் எப்போதும் நன்றியுடன் நினைவிற் கொண்டுள்ளோம்.அவ்வாறே, 1980களில் இலங்கையின் தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடுவராக இந்தியா ஆற்றிய வகிபாகத்தையும் நினைவிற் கொண்டுள்ளோம்.இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட பதின்மூன்றாவது திருத்தச் சட்டமானது குறிப்பீட்ட சில உரிமைகளை இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் பேசும் மக்களுக்கும் ஒட்டுமொத்த இலங்கைக்கும் உறுதிப்படுத்தியுள்ளது.குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மாகாண ஆட்சி வழங்கப்பட்டதுஅத்துடன் தமிழ் மொழியானது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அலுவல்கள் மற்றும் நிர்வாக மொழியாக ஏற்கப்பட்டுள்ளது.மேலும் மாகாண உயர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு அவற்றுக்கு மேன்முறையீட்டு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுஇந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரதான நோக்கமானது, தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதும், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதுமாகும். எனினும், 13 ஆவது திருத்தச் சட்டமானது வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த மக்களுக்கு இறையாண்மை உரிமைகளுடன் கூடிய நிலையான அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தவில்லை.இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியானவர் தனது மீயுயர் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாகாண ஆட்சியை செயலிழக்க செய்ய முடியும் என்பது இந்த மாகாண ஆட்சி முறைமையின் இன்னொரு  மட்டுப்படுத்தலாகும்.ஒரு தூரதிஷ்டவசமான நிகழ்வாக, இலங்கையின் உச்ச நீதிமன்றமானது 2006 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பாவது "செல்லுபடியற்றதும் சட்டவிரோதமானதும்" எனப் பிரகடனப்படுத்தியது. இது இந்தப் பிரதேசத்தைச் சார்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் அரசியல் பின்னடைவாகும்.13 வது திருத்த சட்டம் இலங்கையின் அரசியல் அமைப்பில் உளிவாங்கப்பட்டு 35 வருடங்கள் கடந்து விட்ட இந்த இடைப்பட்ட காலத்தில், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று, 2009ஆம் ஆண்டு முடிவுற்றது.போரின் போதும் போர் முடிவுற்ற உடனடிக் கால கட்டத்திலும் பொதுமக்கள் மீது பாரதூரமான மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன.தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தாததுடன் இராணுவ மயமாக்கலையும், சிங்கள் காலணித்துவத்தையும், பௌத்தமயமாக்கலையும் விரிவாக்கினர். அத்துடன் தமிழ் பேசும் மக்களின் மொழியுரிமை மற்றும் கலாசார உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. அரச அனுசரணையுடன் கூடிய பல்வேறுபட்ட அச்சுறுத்தல்களும் அந்துமீறல்களும் தொடர்கின்றன. இந்த பிரதேசங்களைச் சர்ந்த தமிழ் பேசும் மக்களின் அரசியல், சமூக, கலாசார, பொருளாதார உரிமைகள் அரச கொள்கைகளாலும் நடைமுறைகளாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.எமது கடந்தகால மற்றும் நிகழ்கால அனுபலங்களின் அடிப்படையில், 13வது திருத்தச் சட்டத்தில் காணப்படும் அதிகாரப் பகிர்வு முறையானது நிலைபேறானதல்ல எந்த நேரத்திலும் இலங்கை அரசானது மாகாண அதிகாரத்தை மீளப்பெற முடியும். எனவே, வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் பேசும் மக்கள் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு முறையே எமக்கு கௌரமமான உரிமைகளுடன் கூடிய வாழ்வை உறுதிப்படுத்தக் கூடிய நிலைபேறான ஒரே முறைமை என்று திடமாக நம்புகிறோம்.அந்தவகையில் தங்களுக்கு நல்வரவு கூறுவதுடன் இலங்கைக்கான தங்களின் உத்தியோகபூர்வ வருகையை நாம் உலர்வாக கௌரவிப்பதுடன், இலங்கையில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுந்த தங்களின் பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குமாறு இந்த பகிரங்க வேண்டுகோளை முன்வைக்கிறோம் என்றுன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement