• Apr 04 2025

கடற்படையினரால் இரு சந்தேக நபர்கள் கைது

Chithra / Apr 3rd 2025, 11:31 am
image

 

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 675 கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் டிங்கி படகுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடல் வழி ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்கரையை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 

அதன்படி, ஏப்ரல் 01ஆம் திகதி இரவு கல்பிட்டி பராமுனை கடற்பகுதியை உள்ளடக்கிய இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அந்த கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி (01) ஒன்று கடற்படையின் சிறப்புக் கப்பலினால் அவதானிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 27 மற்றும் 29 வயதுடைய கல்பிட்டி, ஜனசவிபுர மற்றும் சிங்கபுர பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மதுவரி விசேட பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


கடற்படையினரால் இரு சந்தேக நபர்கள் கைது  இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 675 கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் டிங்கி படகுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடல் வழி ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்கரையை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, ஏப்ரல் 01ஆம் திகதி இரவு கல்பிட்டி பராமுனை கடற்பகுதியை உள்ளடக்கிய இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அந்த கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி (01) ஒன்று கடற்படையின் சிறப்புக் கப்பலினால் அவதானிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையிலேயே குறித்த பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 27 மற்றும் 29 வயதுடைய கல்பிட்டி, ஜனசவிபுர மற்றும் சிங்கபுர பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மதுவரி விசேட பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement