• Nov 26 2024

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் தொடர்பில் அநுரவின் அதிரடி உத்தரவு

Chithra / Oct 14th 2024, 11:32 am
image

 

நஷ்டத்தில் இயங்கும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்பு நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்பு தொடர்பில் கடந்த அரசின் நடவடிக்கைகள், பொதுத் தேர்தல் முடியும் வரை புதிய அரசாங்கத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கம் பொது நிறுவன மறுசீரமைப்பு பிரிவை அமைத்தது, அதன் கீழ் 130 பொது நிறுவனங்கள் மறுசீரமைப்பிற்காக பட்டியலிடப்பட்டன.

எனினும் பொதுத் தேர்தலின் பின்னர் அது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் உட்பட நஷ்டத்தில் இயங்கும் அரசநிறுவனங்களை மறுசீரமைப்பது மற்றும் மத்தல விமான நிலையத்தினை வேறு நிர்வாகத்திடம் கையளிப்பது போன்ற முடிவுகளை பொதுத்தேர்தலின் பின்னரே அரசாங்கம் எடுக்கவுள்ளது. 


நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் தொடர்பில் அநுரவின் அதிரடி உத்தரவு  நஷ்டத்தில் இயங்கும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்பு நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்பு தொடர்பில் கடந்த அரசின் நடவடிக்கைகள், பொதுத் தேர்தல் முடியும் வரை புதிய அரசாங்கத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.கடந்த அரசாங்கம் பொது நிறுவன மறுசீரமைப்பு பிரிவை அமைத்தது, அதன் கீழ் 130 பொது நிறுவனங்கள் மறுசீரமைப்பிற்காக பட்டியலிடப்பட்டன.எனினும் பொதுத் தேர்தலின் பின்னர் அது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி உத்தரவாதம் வழங்கியுள்ளார்.ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் உட்பட நஷ்டத்தில் இயங்கும் அரசநிறுவனங்களை மறுசீரமைப்பது மற்றும் மத்தல விமான நிலையத்தினை வேறு நிர்வாகத்திடம் கையளிப்பது போன்ற முடிவுகளை பொதுத்தேர்தலின் பின்னரே அரசாங்கம் எடுக்கவுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement