• Aug 19 2025

டிசம்பரில் பொருளாதார நெருக்கடியை சந்திக்க போகும் அநுர அரசு! எச்சரிக்கும் எதிர்க்கட்சி

Chithra / Aug 19th 2025, 3:13 pm
image


அநுர  அரசாங்கம் டிசம்பர் மாதத்தில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கப்  போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

கோட்டாபய ஆட்சிக் காலத்திலும் அரசாங்கம் ஆபத்தான நிலையை நோக்கி செல்கையில் தாம் இவ்வாறு சுட்டிக்காட்டியதாகவும் கபீர் ஹாசிம் சுட்டிக்காட்டினார்.

மத்திய அதிவேக பாதையின் எஞ்சியுள்ள வேலைகளை முடிப்பதற்காக சீனாவின் எக்சீம் வங்கியில் 500 மில்லியன் டொலர்களும் திரைசேறியில்  493 மில்லியன் டொலர்களுடன் 993 மில்லியன் கடன் பெற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

குறித்த கடன், கடன் மறுசீரமைப்பு குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டுள்ளதா? அத்தோடு இந்தக் கடனை எப்படி செலுத்த போகின்றனர் என்பது தொடர்பில் குறிப்பிடவில்லை.

இந்த வருடத்தில் எமக்கு IMF   335 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

அத்தோடு இதர நிறுவனங்களான உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றில் 300-305 டொலர் மில்லியன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டொலர் மில்லியன் 95 கிடைத்துள்ளது. அதுவும் எமக்கு பாதிப்பாகும்.

மேலும் இந்த வருடத்தில் முடிவடைந்த ஆறு மாதங்களில் வெளிநாட்டு கையிருப்பு குறைவடைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் - நவம்பர் மாதத்தில் காணப்பட்டதை விட குறைந்துள்ளது. மேலும் இலங்கையின் தேசிய நிதி சந்தையில் டொலரின் கொடுக்கல் வாங்கல்கள் அதிகரித்துள்ளன.

இலங்கையின் மொத்த வெளிநாட்டு கையிருப்பு 2025 மார்ச்சில்  குறைவடைந்துள்ளது.

அரசின் நிதி நிலைமையில் இவ்வாறான சம்பவங்கள் சிவப்பு எச்சரிக்கையாகவே தோன்றுகிறது.

இவ்வாறு நாங்கள் குறிப்பிடும் தகவல்களை அரசாங்கம் குறையாகவே பார்க்கிறது.ஆனால் இலங்கை மத்திய வங்கி பின்பற்றும் நிதி கொள்கைகளால் அரசாங்கம் பாதுகாப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“1977 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன திறந்த பொருளாதார கொள்கையை இந்த நாட்டில் அறிமுகம் செய்தார். ஆசியாவிலே முதலாவது திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகம் செய்தவர் அவர் தான். 

அவரின் இந்த பொருளாதார மறு சீரமைப்பு காரணமாக  சுதந்திர பொருளாதார கட்டமைப்பை பலப்படுத்தி வர்த்தகப் பொருட்களை ஏற்றுமதியில் 75 சதவீதம் துறைசார் உற்பத்திகளாக மாற்றம் கண்டன. 

95 சதவீதம் தேயிலை, இறப்பர் தெங்காக இருந்ததை 75 சதவீத கைத்தொழில் பொருட்களாக மாற்றினார். இதுவே உண்மையான முறைமை மாற்றம். வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வந்தபோது, அந்த நிறுவனங்களுக்கு எதிராக இடதுசாரி கட்சியான ஜே.வி.பி போராட்டத்தை முன்னெடுத்து அதனை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சி எடுத்திருந்தனர்.

எனவே இந்தநாட்டின் பொருளாதார மயான பூமியாக செயற்பட்டவர்கள் ஜே.வி.பியினரே என்பதோடு, 74 வருட சாபத்தின் பிரதான சூத்திரதாரிகளாக செயற்பட்டவர்கள். 

இப்போது பணச் சூதாட்ட சட்ட மூலத்தை கொண்டு வந்திருப்பது தான் விதியின் விளையாட்டு. பொருளாதாரத்தை சரிவிற்கு கொண்டு சென்றவர்களே இன்று அது தொடர்பான சட்டட மூலத்தை இயற்றும் சூழலில் இருக்கின்றனர்.

இந்த சட்ட மூலம் கொண்டு வருவது மிக முக்கியம், இப்போது கொண்டுவரப்பட்டமையே மிகத் தாமதமானது அத்துடன் பல குறைபாடுகளுடன் தான் இந்த சட்ட மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இந்த சட்டம் வெல்ல முடியாது. ஏனென்றால் இந்த சட்ட மூலம் எதை இலக்காக கொண்டுள்ளது. ஒரு சட்ட மூலத்திற்கான வரையறை இருக்க வேண்டும், கருப்புப் பணத்தின் மூலம் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை இந்த சட்ட மூலம் குறைக்க வேண்டும், அரசாங்கத்திற்கு உச்ச வருமானம் கிடைக்கும் வகையில் இந்த சட்ட மூலம் வகுப்பட வேண்டும், இப்படியான முக்கிய விடயங்கள் இந்த சட்ட மூலத்தில் இருக்க வேண்டும். 

எனவே இப்போது இலங்கைக்கு இப்படியான ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை நாம் பொருளாதார சந்தர்ப்பமாக மாற்ற வேண்டும். எனவே ஜே.வி.பி கொண்டு வரும் இந்த பணச் சூதாட்ட சட்ட மூலம் பொருளாதாரத்திற்கு நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம், ஆனால் இதில் பல குறைபாடுகள் இருக்கின்றன.

இந்த நாட்டிலே பல துறைகளில் மாபியாக்கள் இயங்கிவருகின்றன. அரிசி மாபியா இருக்கின்றது ஆனால் இந்த அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியவில்லை. சுங்க மாபியா இருக்கின்றது, மின்சார மாபியா இருக்கின்றது, ஆனால் இரண்டு வாரத்திற்கு முன்னர் சட்ட மூலத்தை கொண்டு வந்த அதனை மேலும் வலுவூட்டியுள்ளனர். 


எனவே சூதாட்ட மாபியாவும் இதனூடாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இப்படியாக பல மாபியாக்கள் இங்கே காணப்படுகின்றன. எனவே இதற்கான ஒழுங்குறுத்துதல் இருக்க வேண்டும். எனவே இந்த சட்ட மூலம் என்பது மாபியாக்களை இல்லாமல் செய்வதற்காக உருவாக்கப்பட வேண்டியவை” எனவும் நாடாளமன்ற உறுப்பினா கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

டிசம்பரில் பொருளாதார நெருக்கடியை சந்திக்க போகும் அநுர அரசு எச்சரிக்கும் எதிர்க்கட்சி அநுர  அரசாங்கம் டிசம்பர் மாதத்தில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கப்  போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில் கோட்டாபய ஆட்சிக் காலத்திலும் அரசாங்கம் ஆபத்தான நிலையை நோக்கி செல்கையில் தாம் இவ்வாறு சுட்டிக்காட்டியதாகவும் கபீர் ஹாசிம் சுட்டிக்காட்டினார்.மத்திய அதிவேக பாதையின் எஞ்சியுள்ள வேலைகளை முடிப்பதற்காக சீனாவின் எக்சீம் வங்கியில் 500 மில்லியன் டொலர்களும் திரைசேறியில்  493 மில்லியன் டொலர்களுடன் 993 மில்லியன் கடன் பெற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.குறித்த கடன், கடன் மறுசீரமைப்பு குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டுள்ளதா அத்தோடு இந்தக் கடனை எப்படி செலுத்த போகின்றனர் என்பது தொடர்பில் குறிப்பிடவில்லை.இந்த வருடத்தில் எமக்கு IMF   335 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.அத்தோடு இதர நிறுவனங்களான உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றில் 300-305 டொலர் மில்லியன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டொலர் மில்லியன் 95 கிடைத்துள்ளது. அதுவும் எமக்கு பாதிப்பாகும்.மேலும் இந்த வருடத்தில் முடிவடைந்த ஆறு மாதங்களில் வெளிநாட்டு கையிருப்பு குறைவடைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் - நவம்பர் மாதத்தில் காணப்பட்டதை விட குறைந்துள்ளது. மேலும் இலங்கையின் தேசிய நிதி சந்தையில் டொலரின் கொடுக்கல் வாங்கல்கள் அதிகரித்துள்ளன.இலங்கையின் மொத்த வெளிநாட்டு கையிருப்பு 2025 மார்ச்சில்  குறைவடைந்துள்ளது.அரசின் நிதி நிலைமையில் இவ்வாறான சம்பவங்கள் சிவப்பு எச்சரிக்கையாகவே தோன்றுகிறது.இவ்வாறு நாங்கள் குறிப்பிடும் தகவல்களை அரசாங்கம் குறையாகவே பார்க்கிறது.ஆனால் இலங்கை மத்திய வங்கி பின்பற்றும் நிதி கொள்கைகளால் அரசாங்கம் பாதுகாப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “1977 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன திறந்த பொருளாதார கொள்கையை இந்த நாட்டில் அறிமுகம் செய்தார். ஆசியாவிலே முதலாவது திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகம் செய்தவர் அவர் தான். அவரின் இந்த பொருளாதார மறு சீரமைப்பு காரணமாக  சுதந்திர பொருளாதார கட்டமைப்பை பலப்படுத்தி வர்த்தகப் பொருட்களை ஏற்றுமதியில் 75 சதவீதம் துறைசார் உற்பத்திகளாக மாற்றம் கண்டன. 95 சதவீதம் தேயிலை, இறப்பர் தெங்காக இருந்ததை 75 சதவீத கைத்தொழில் பொருட்களாக மாற்றினார். இதுவே உண்மையான முறைமை மாற்றம். வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வந்தபோது, அந்த நிறுவனங்களுக்கு எதிராக இடதுசாரி கட்சியான ஜே.வி.பி போராட்டத்தை முன்னெடுத்து அதனை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சி எடுத்திருந்தனர்.எனவே இந்தநாட்டின் பொருளாதார மயான பூமியாக செயற்பட்டவர்கள் ஜே.வி.பியினரே என்பதோடு, 74 வருட சாபத்தின் பிரதான சூத்திரதாரிகளாக செயற்பட்டவர்கள். இப்போது பணச் சூதாட்ட சட்ட மூலத்தை கொண்டு வந்திருப்பது தான் விதியின் விளையாட்டு. பொருளாதாரத்தை சரிவிற்கு கொண்டு சென்றவர்களே இன்று அது தொடர்பான சட்டட மூலத்தை இயற்றும் சூழலில் இருக்கின்றனர்.இந்த சட்ட மூலம் கொண்டு வருவது மிக முக்கியம், இப்போது கொண்டுவரப்பட்டமையே மிகத் தாமதமானது அத்துடன் பல குறைபாடுகளுடன் தான் இந்த சட்ட மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இந்த சட்டம் வெல்ல முடியாது. ஏனென்றால் இந்த சட்ட மூலம் எதை இலக்காக கொண்டுள்ளது. ஒரு சட்ட மூலத்திற்கான வரையறை இருக்க வேண்டும், கருப்புப் பணத்தின் மூலம் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை இந்த சட்ட மூலம் குறைக்க வேண்டும், அரசாங்கத்திற்கு உச்ச வருமானம் கிடைக்கும் வகையில் இந்த சட்ட மூலம் வகுப்பட வேண்டும், இப்படியான முக்கிய விடயங்கள் இந்த சட்ட மூலத்தில் இருக்க வேண்டும். எனவே இப்போது இலங்கைக்கு இப்படியான ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை நாம் பொருளாதார சந்தர்ப்பமாக மாற்ற வேண்டும். எனவே ஜே.வி.பி கொண்டு வரும் இந்த பணச் சூதாட்ட சட்ட மூலம் பொருளாதாரத்திற்கு நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம், ஆனால் இதில் பல குறைபாடுகள் இருக்கின்றன.இந்த நாட்டிலே பல துறைகளில் மாபியாக்கள் இயங்கிவருகின்றன. அரிசி மாபியா இருக்கின்றது ஆனால் இந்த அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியவில்லை. சுங்க மாபியா இருக்கின்றது, மின்சார மாபியா இருக்கின்றது, ஆனால் இரண்டு வாரத்திற்கு முன்னர் சட்ட மூலத்தை கொண்டு வந்த அதனை மேலும் வலுவூட்டியுள்ளனர். எனவே சூதாட்ட மாபியாவும் இதனூடாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இப்படியாக பல மாபியாக்கள் இங்கே காணப்படுகின்றன. எனவே இதற்கான ஒழுங்குறுத்துதல் இருக்க வேண்டும். எனவே இந்த சட்ட மூலம் என்பது மாபியாக்களை இல்லாமல் செய்வதற்காக உருவாக்கப்பட வேண்டியவை” எனவும் நாடாளமன்ற உறுப்பினா கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement