வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் இருக்கும் உல்லாசப் பயணத்துறையின் முக்கிய இடமான சாட்டி கடற்கரையின் அழகு மிக்க "சவுக்க" மரங்கள் பாதுகாக்கப்பட்டு அவை உரியமுறையில் பராமரிகப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த்
கடற்கரையோரத்தில் குவிந்திருக்கும் கடற் சாதாளைகளையும் அகற்றி சுற்றுலா தளத்தை சுற்றுலாவிகளை கவரும் வகையில் அழகுபடுத்த வேண்டும் என்றும்
வலியுறுத்தியுள்ளார்.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை 10 மணிக்கு தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது குறித்த விடையம் குறித்து உறுபினர் ஜெ.அனுசியாவினால் சபையில் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
வடபகுதியில் குறிப்பாக யாழ் மாவட்டத்தின் சுற்றுலா மையங்களில் முக்கிய இடமாக இந்த சாட்டிக் கடற்கரை இருக்கின்றது.
இக்கடற்கரையின் அழகு இந்த "சவுக்கு" மரங்கள்தான். ஆனால் அவற்றுள் சில மரங்கள் பாதுகாப்பற்ற முறியும் நிலையிலும், மின்சார வடங்கள் செல்லும் மார்க்கத்துக்கு இடையூறு உள்ளாக்கும் வகையிலும் இருக்கின்றன.
இவற்றை உரிய முறையில் பராமரித்து சுற்றுலா தளத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது சபையின் பொறுப்பாகும்.
அதேபோன்று இந்தப் பகுதியில் காணப்படும் கடற் சாதாளைகளும் அகற்றப்படுவது அவசியமாகும். அந்த வகையில் கரைசேர்ந்து கிடக்கும் சாதாளைகளை பசகைக்காக பெற்றுக்கொள்ள விரும்பும் நபர்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சபையில் முன்மொழிவாக வலியுறுத்தினர்.
குறித்த கோரிக்கை உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் சவுக்கு மர இலைகள் கிழைகள் வரும் மார்கழி மாதம் மவுசு மிக்கதாக இருப்பதனால் குறித்த சீரமைப்பை அடுத்த மாதம் மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் அறிவித்திருந்தார்.
அதேபோன்று சாதாளைகளையும் தேவையானோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சாட்டி கடற்கரையின் சவுக்கு மரங்கள் உரிய முறையில் பராமரிக்கப்பட வேண்டும் சபையில் அனுசியா வலியுறுத்து. வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் இருக்கும் உல்லாசப் பயணத்துறையின் முக்கிய இடமான சாட்டி கடற்கரையின் அழகு மிக்க "சவுக்க" மரங்கள் பாதுகாக்கப்பட்டு அவை உரியமுறையில் பராமரிகப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் கடற்கரையோரத்தில் குவிந்திருக்கும் கடற் சாதாளைகளையும் அகற்றி சுற்றுலா தளத்தை சுற்றுலாவிகளை கவரும் வகையில் அழகுபடுத்த வேண்டும் என்றும்வலியுறுத்தியுள்ளார்.வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை 10 மணிக்கு தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.இதன்போது குறித்த விடையம் குறித்து உறுபினர் ஜெ.அனுசியாவினால் சபையில் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,வடபகுதியில் குறிப்பாக யாழ் மாவட்டத்தின் சுற்றுலா மையங்களில் முக்கிய இடமாக இந்த சாட்டிக் கடற்கரை இருக்கின்றது.இக்கடற்கரையின் அழகு இந்த "சவுக்கு" மரங்கள்தான். ஆனால் அவற்றுள் சில மரங்கள் பாதுகாப்பற்ற முறியும் நிலையிலும், மின்சார வடங்கள் செல்லும் மார்க்கத்துக்கு இடையூறு உள்ளாக்கும் வகையிலும் இருக்கின்றன.இவற்றை உரிய முறையில் பராமரித்து சுற்றுலா தளத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது சபையின் பொறுப்பாகும்.அதேபோன்று இந்தப் பகுதியில் காணப்படும் கடற் சாதாளைகளும் அகற்றப்படுவது அவசியமாகும். அந்த வகையில் கரைசேர்ந்து கிடக்கும் சாதாளைகளை பசகைக்காக பெற்றுக்கொள்ள விரும்பும் நபர்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சபையில் முன்மொழிவாக வலியுறுத்தினர்.குறித்த கோரிக்கை உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் சவுக்கு மர இலைகள் கிழைகள் வரும் மார்கழி மாதம் மவுசு மிக்கதாக இருப்பதனால் குறித்த சீரமைப்பை அடுத்த மாதம் மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் அறிவித்திருந்தார்.அதேபோன்று சாதாளைகளையும் தேவையானோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.