கொழும்பு நகரில் கால்வாய்களை மறித்து அனுமதியற்ற வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக பெய்து வரும் தொடர்சியான மழை காரணமாக கொழும்பு நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன.
இந்தநிலையில், கால்வாய்களை மறித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அவ்வாறான 22 வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பணிப்பாளர் பொறியியலாளர் பீ ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 08 கட்டிடங்கள் அபாய நிலையில் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, கெத்தாராம பாரோன் ஜயதிலக்க கல்லூரி கட்டிடம், ஜும்மா மஸ்ஜித் வீதி வீடுகள், திம்பிரிகசாய அபயாராம மூன்று மாடி வீடுகள் உட்பட 6 அடுக்குமாடி குடியிருப்புகள் அடங்குகின்றன.
கொழும்பில் அபாய நிலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் - மாநகர சபை எடுத்த நடவடிக்கை கொழும்பு நகரில் கால்வாய்களை மறித்து அனுமதியற்ற வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.கடந்த சில மாதங்களாக பெய்து வரும் தொடர்சியான மழை காரணமாக கொழும்பு நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன.இந்தநிலையில், கால்வாய்களை மறித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.அவ்வாறான 22 வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பணிப்பாளர் பொறியியலாளர் பீ ரணவக்க தெரிவித்துள்ளார்.இதேவேளை கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 08 கட்டிடங்கள் அபாய நிலையில் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.அதற்கமைய, கெத்தாராம பாரோன் ஜயதிலக்க கல்லூரி கட்டிடம், ஜும்மா மஸ்ஜித் வீதி வீடுகள், திம்பிரிகசாய அபயாராம மூன்று மாடி வீடுகள் உட்பட 6 அடுக்குமாடி குடியிருப்புகள் அடங்குகின்றன.