• Feb 11 2025

04 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்!

Tharmini / Feb 10th 2025, 2:21 pm
image

2025 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்வதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டதை அடுத்து, 04 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுகளான டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியவற்றுக்கு பின்வரும் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு நியமிக்கப்பட்ட பொறுப்பு அமைச்சர்களின் விவரங்கள் பின்வருமாறு, டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பதில் அமைச்சர் – டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன பதில் பாதுகாப்பு அமைச்சர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான பதில் அமைச்சர் – தொழிலாளர் அமைச்சர் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான பிரதி அமைச்சர் டாக்டர் அனில் ஜயந்த பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளனர்.

04 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம் 2025 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்வதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டதை அடுத்து, 04 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுகளான டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியவற்றுக்கு பின்வரும் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவ்வாறு நியமிக்கப்பட்ட பொறுப்பு அமைச்சர்களின் விவரங்கள் பின்வருமாறு, டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பதில் அமைச்சர் – டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன பதில் பாதுகாப்பு அமைச்சர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான பதில் அமைச்சர் – தொழிலாளர் அமைச்சர் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான பிரதி அமைச்சர் டாக்டர் அனில் ஜயந்த பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement