• Mar 20 2025

நாட்டில் மக்களை வாழ வைக்க முடியாத ஒரு அரசாங்கமே ஆட்சியமைத்துள்ளது!

Tharmini / Feb 10th 2025, 2:29 pm
image

நாட்டு மக்களை வாழ வைக்க முடியாத ஒரு அரசாங்கமே தற்போது ஆட்சியமைத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

அவிஸ்ஸாவலையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது ”இன்று விவசாயிகளுக்கு நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும்,  நுகர்வோரால் தாங்க முடியாத விலைக்கு தேங்காய், அரிசி, உப்பு போன்றவற்றை வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது எனவும், அத்தியாவசிய உணவுகளை வழங்க முடியாத ஒரு அரசாங்கம் மக்களை எப்படி வாழவைக்கும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன்  இன்றும் பெரும்பாலான மக்கள் கடன் சுமையில் மூழ்கியுள்ளனர் எனவும் நன்றாக வாழ்ந்த மக்களின் ஆயுட்காலம் குறைந்து வருகின்றது எனவும் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், பொது மக்கள், உற்பத்தி, நுகர்வு மற்றும் முதலீடு செய்வதைக் குறைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் விவசாயிகள் தங்கத்தை அடமானம் வைத்து விவசாயத்தில் ஈடுபட்டாலும், உரமும் நிலையான விலையும் இல்லை எனவும்,  இதனால் அவர்கள் கூட்டுறவுத் துறையிலிருந்து கடன் வாங்குவது அதிகரித்துள்ளது எனவும் எதிர்க்கட்சி தலைவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் மக்களை வாழ வைக்க முடியாத ஒரு அரசாங்கமே ஆட்சியமைத்துள்ளது நாட்டு மக்களை வாழ வைக்க முடியாத ஒரு அரசாங்கமே தற்போது ஆட்சியமைத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.அவிஸ்ஸாவலையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது ”இன்று விவசாயிகளுக்கு நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும்,  நுகர்வோரால் தாங்க முடியாத விலைக்கு தேங்காய், அரிசி, உப்பு போன்றவற்றை வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது எனவும், அத்தியாவசிய உணவுகளை வழங்க முடியாத ஒரு அரசாங்கம் மக்களை எப்படி வாழவைக்கும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.அத்துடன்  இன்றும் பெரும்பாலான மக்கள் கடன் சுமையில் மூழ்கியுள்ளனர் எனவும் நன்றாக வாழ்ந்த மக்களின் ஆயுட்காலம் குறைந்து வருகின்றது எனவும் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், பொது மக்கள், உற்பத்தி, நுகர்வு மற்றும் முதலீடு செய்வதைக் குறைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் விவசாயிகள் தங்கத்தை அடமானம் வைத்து விவசாயத்தில் ஈடுபட்டாலும், உரமும் நிலையான விலையும் இல்லை எனவும்,  இதனால் அவர்கள் கூட்டுறவுத் துறையிலிருந்து கடன் வாங்குவது அதிகரித்துள்ளது எனவும் எதிர்க்கட்சி தலைவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement