நாவலப்பிட்டி தெகிந்த வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று இன்று (13) அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவலப்பிட்டி தெகிந்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக முச்சக்கரவண்டியில் உரிமையாளர் சென்றுள்ளார்.
நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் மீண்டும் முச்சக்கரவண்டியில் நாவலப்பிட்டி வீதியூடாகப் பயணித்துள்ளார்.
நாவலப்பிட்டி தெகிந்த வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
தீப்பிடித்து எரிந்ததில் முச்சக்கரவண்டி முழுவதுமாக எரிந்து சாம்பலாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தையடுத்து தகவலறிந்து நாவலப்பிட்டி பொலிஸார் குறித்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட எரிபொருள் கசிவே தீ விபத்துக்கான காரணம் என நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
திடீரென தீப்பிடித்து எரிந்த ஓட்டோ; உரிமையாளர் கண்முன்னே சாம்பலாகி எரிந்த சோகம் நாவலப்பிட்டி தெகிந்த வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று இன்று (13) அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவலப்பிட்டி தெகிந்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக முச்சக்கரவண்டியில் உரிமையாளர் சென்றுள்ளார். நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் மீண்டும் முச்சக்கரவண்டியில் நாவலப்பிட்டி வீதியூடாகப் பயணித்துள்ளார். நாவலப்பிட்டி தெகிந்த வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. தீப்பிடித்து எரிந்ததில் முச்சக்கரவண்டி முழுவதுமாக எரிந்து சாம்பலாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தையடுத்து தகவலறிந்து நாவலப்பிட்டி பொலிஸார் குறித்த பகுதிக்கு விரைந்து சென்றனர். தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட எரிபொருள் கசிவே தீ விபத்துக்கான காரணம் என நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.