மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்துக்குளானதில் 86 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவா்களில் பெரும்பாலானவா்கள் மாணவா்கள் என்று காங்கோ அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
காங்கோவில் பயணித்துக் கொண்டிருந்த படகு திடீரென நடுக்கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
எனினும் படகு எவ்வாறு, எப்படி விபத்திற்குள்ளானது என்பது குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
இருந்தாலும், அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றதும், இரவு நேரத்தில் போதிய வெளிச்சமின்றி அந்த விசைப் படகு இயக்கப்பட்டதும் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட பயணிகளை விட திக பயணிகளை ஏற்றிச் சென்று படகுகள் பயணிப்பதன் காரணங்களால் காங்கோவில் அடிக்கடி படகு விபத்துகள் நேரிடுகின்றன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய ஆபிரிக்க நாட்டில் நடுக்கடலில் கவிழ்ந்த படகு; 86 பேர் உயிரிழப்பு - மாணவர்களே அதிகம் மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்துக்குளானதில் 86 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவா்களில் பெரும்பாலானவா்கள் மாணவா்கள் என்று காங்கோ அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. காங்கோவில் பயணித்துக் கொண்டிருந்த படகு திடீரென நடுக்கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. எனினும் படகு எவ்வாறு, எப்படி விபத்திற்குள்ளானது என்பது குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும், அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றதும், இரவு நேரத்தில் போதிய வெளிச்சமின்றி அந்த விசைப் படகு இயக்கப்பட்டதும் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட பயணிகளை விட திக பயணிகளை ஏற்றிச் சென்று படகுகள் பயணிப்பதன் காரணங்களால் காங்கோவில் அடிக்கடி படகு விபத்துகள் நேரிடுகின்றன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.