• Sep 13 2025

சாவகச்சேரி நகரசபையின் வீதி புனரமைப்புப் பணிகள் இன்று முன்னெடுப்பு!

shanuja / Sep 13th 2025, 8:36 pm
image

சாவகச்சேரி நகரசபையின் வீதி புனரமைப்புப் பணிகள் இன்றைய தினம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.


நகராட்சி மன்றத்தின் மீசாலை கிழக்கு வட்டாரத்திற்குட்பட்ட அல்லாரை ஊரெல்லைத் தெரு மற்றும் குஞ்சர்துரவு வீதி என்பவற்றின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.


மீசாலை கிழக்கு வட்டார உறுப்பினர் வரேந்திரன் பிரகாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நகராட்சி மன்ற தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஷ், உபதவிசாளர் ஞா.கிஷோர் மற்றும் நகரசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு வீதிப் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தனர். 


புழுதி ஒழுங்கைகளாக இருந்த குறித்த வீதிகள் முதற்தடவையாக வட்டார உறுப்பினர் பிரகாஷின் நிதி ஒதுக்கீட்டினால் மீசாலை அல்லாரை ஊரெல்லை வீதி 6.7 மில்லியன் ரூபாவில் கொங்கிறீட் வீதியாகவும், குஞ்சர்துரவு வீதி 4.4 மில்லியன் ரூபாவில் தார் வீதியாகவும் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி நகரசபையின் வீதி புனரமைப்புப் பணிகள் இன்று முன்னெடுப்பு சாவகச்சேரி நகரசபையின் வீதி புனரமைப்புப் பணிகள் இன்றைய தினம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.நகராட்சி மன்றத்தின் மீசாலை கிழக்கு வட்டாரத்திற்குட்பட்ட அல்லாரை ஊரெல்லைத் தெரு மற்றும் குஞ்சர்துரவு வீதி என்பவற்றின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.மீசாலை கிழக்கு வட்டார உறுப்பினர் வரேந்திரன் பிரகாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நகராட்சி மன்ற தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஷ், உபதவிசாளர் ஞா.கிஷோர் மற்றும் நகரசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு வீதிப் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தனர். புழுதி ஒழுங்கைகளாக இருந்த குறித்த வீதிகள் முதற்தடவையாக வட்டார உறுப்பினர் பிரகாஷின் நிதி ஒதுக்கீட்டினால் மீசாலை அல்லாரை ஊரெல்லை வீதி 6.7 மில்லியன் ரூபாவில் கொங்கிறீட் வீதியாகவும், குஞ்சர்துரவு வீதி 4.4 மில்லியன் ரூபாவில் தார் வீதியாகவும் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement