வரலாற்று சிறப்புமிக்க மருதானை தொடருந்து நிலையத்தின் புதுப்பித்தல் பணிகள் அரசாங்கத்தின் "கனவு இலக்கு" என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நாளைய தினம் ஆரம்பமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தின் இரண்டாவது பெரிய தொடருந்து நிலையமான மருதானை, நாட்டின் மிக முக்கியமான பாரம்பரிய நிலையங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
1889 ஆம் ஆண்டு முதலில் மரத்தால் கட்டப்பட்ட குறித்த தொடருந்து நிலையமானது, காலப்போக்கில் வளர்ச்சியடைந்ததன் பின்னர் ஒரு முக்கிய மையமாக மாறியது.
மேலும் குறித்த தொடருந்து நிலையம் 1893ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் திகதி ஒரு நிரந்தர கட்டிடமாக திறக்கப்பட்டது.
புதிய புதுப்பித்தல் நிலையத்தின் வரலாற்றுத் தன்மைக்கு சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க, அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை மாத்திரமே பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருதானை தொடருந்து நிலையத்தின் புதுப்பித்தல் பணிகள் ஆரம்பம் வரலாற்று சிறப்புமிக்க மருதானை தொடருந்து நிலையத்தின் புதுப்பித்தல் பணிகள் அரசாங்கத்தின் "கனவு இலக்கு" என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நாளைய தினம் ஆரம்பமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தின் இரண்டாவது பெரிய தொடருந்து நிலையமான மருதானை, நாட்டின் மிக முக்கியமான பாரம்பரிய நிலையங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. 1889 ஆம் ஆண்டு முதலில் மரத்தால் கட்டப்பட்ட குறித்த தொடருந்து நிலையமானது, காலப்போக்கில் வளர்ச்சியடைந்ததன் பின்னர் ஒரு முக்கிய மையமாக மாறியது. மேலும் குறித்த தொடருந்து நிலையம் 1893ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் திகதி ஒரு நிரந்தர கட்டிடமாக திறக்கப்பட்டது. புதிய புதுப்பித்தல் நிலையத்தின் வரலாற்றுத் தன்மைக்கு சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க, அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை மாத்திரமே பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.