சப்ரகமுவ மஹா சமன் தேவாலயத்தில் நாளை (11) நடைபெறவிருந்த தேர்தலை நடத்துவதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அந்த ஆலயத்தின் தற்காலிகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த எஸ். வி. சந்திரசிங்க தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர், 20 ஆம் திகதி வரை அமுலில் இருக்குமாறு இந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த தேர்தல் நடைபெறும் விதம் சட்டத்திற்கு முரணானது என மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமன் தேவாலய தேர்தலுக்கு இடைக்காலத் தடை சப்ரகமுவ மஹா சமன் தேவாலயத்தில் நாளை (11) நடைபெறவிருந்த தேர்தலை நடத்துவதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.அந்த ஆலயத்தின் தற்காலிகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த எஸ். வி. சந்திரசிங்க தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர், 20 ஆம் திகதி வரை அமுலில் இருக்குமாறு இந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.குறித்த தேர்தல் நடைபெறும் விதம் சட்டத்திற்கு முரணானது என மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.