• Aug 06 2025

செம்மணி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட சான்றுகள்: 200 பேர் பார்த்தும் எதுவும் அடையாளம் காட்டப்படவில்லை

Chithra / Aug 6th 2025, 7:29 am
image


யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் மனித புதைகுழிகளில் இருந்து  நேற்று புதிதாக 06 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நேற்று 31 ஆவது நாளாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மொத்தமாக 141 மனித என்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

அதில் 130 மனித என்பு எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுநீதிமன்ற கட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, இஸ்கான் பரிசோதனை அறிக்கைகளை மூன்று வாரத்திற்குள் ஜயவர்தனபுர பல்கலைக்கழக தொழில்நுட்ப பிரிவினர் யாழ். நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிப்பார்கள் என சட்டத்தரணி ரனித்தா தெரிவித்துள்ளார்

அதேவேளை புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்கள் நேற்று மதியம் 1.30 மணி முதல் மாலை 05 மணி வரையில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டிருந்தனர். 

அதில் எந்த தடயங்களும் அடையாளப்படுத்த படவில்லை என சட்டத்தரணி மேலும் தெரிவித்துள்ளார்.


செம்மணி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட சான்றுகள்: 200 பேர் பார்த்தும் எதுவும் அடையாளம் காட்டப்படவில்லை யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் மனித புதைகுழிகளில் இருந்து  நேற்று புதிதாக 06 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.நேற்று 31 ஆவது நாளாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மொத்தமாக 141 மனித என்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் 130 மனித என்பு எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுநீதிமன்ற கட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளன.அதேவேளை, இஸ்கான் பரிசோதனை அறிக்கைகளை மூன்று வாரத்திற்குள் ஜயவர்தனபுர பல்கலைக்கழக தொழில்நுட்ப பிரிவினர் யாழ். நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிப்பார்கள் என சட்டத்தரணி ரனித்தா தெரிவித்துள்ளார்அதேவேளை புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்கள் நேற்று மதியம் 1.30 மணி முதல் மாலை 05 மணி வரையில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டிருந்தனர். அதில் எந்த தடயங்களும் அடையாளப்படுத்த படவில்லை என சட்டத்தரணி மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement