பருவச்சீட்டு இருந்தும் அரச பேருந்துகளில் தம்மை ஏற்றுவது இல்லை என்று கினிகத்தேன பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
கினிகத்தேன பகுதியில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்களை அரச பேருந்துகளில் ஏற்றுவதில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து பாடசாலை மாணவர்கள்தெரிவிக்கையில்,
காலை வேளையில் அரச பேருந்துகளில் ஏற்றாமல் செல்வதால் பாடசாலை நேரத்திற்கு செல்ல வேண்டி உள்ளதாலும் தனியார் பேருந்துகளில் அதிகளவு பணம் கொடுத்து செல்ல வேண்டி உள்ளது.
மாலை வேளையில் பாடசாலை நிறைவு பெற்று 2 மணிக்கு மேல் அவ் வீதியூடாக வரும் அரச பேருந்துகளில் ஏற்றாமல் செல்வதால் நடை பயணமாக இல்லங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது .
முன்கூட்டியே பணம் கொடுத்து பருவகால சீட்டைப் பெற்றுக்கொண்டும் எந்தப் பயனும் இல்லை.
எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
பருவச்சீட்டு இருந்தும் பேருந்துகளில் ஏற்றுவதில்லை - மாணவர்கள் முறைப்பாடு பருவச்சீட்டு இருந்தும் அரச பேருந்துகளில் தம்மை ஏற்றுவது இல்லை என்று கினிகத்தேன பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.கினிகத்தேன பகுதியில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்களை அரச பேருந்துகளில் ஏற்றுவதில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து பாடசாலை மாணவர்கள்தெரிவிக்கையில், காலை வேளையில் அரச பேருந்துகளில் ஏற்றாமல் செல்வதால் பாடசாலை நேரத்திற்கு செல்ல வேண்டி உள்ளதாலும் தனியார் பேருந்துகளில் அதிகளவு பணம் கொடுத்து செல்ல வேண்டி உள்ளது. மாலை வேளையில் பாடசாலை நிறைவு பெற்று 2 மணிக்கு மேல் அவ் வீதியூடாக வரும் அரச பேருந்துகளில் ஏற்றாமல் செல்வதால் நடை பயணமாக இல்லங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது . முன்கூட்டியே பணம் கொடுத்து பருவகால சீட்டைப் பெற்றுக்கொண்டும் எந்தப் பயனும் இல்லை. எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.