• Aug 05 2025

செம்மணி தொடர்பில் சாட்சியமளிக்க சோமரட்ன ராஜபக்ச தயார்; செய்தி உண்மையெனில் அரசாங்கம் வழி வகுக்க வேண்டும் - சுமந்திரன்

shanuja / Aug 5th 2025, 12:11 pm
image

செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச நீதிமன்றிலே சாட்சியமளிக்க தான் தயார் என சோமரட்ன ராஜபக்ச தெரிவித்திருந்தால் அதற்கு அரசாங்கம் வழி செய்து கொடுக்க வேண்டும் என்று சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


செம்மணி மனித புதைகுழியில் அகழ்வை நேற்று நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


செம்மணி மனித புதைகுழி ஆய்வு நடைபெறுகிற இடத்திலே ஸ்கேனர் கருவி இன்றைக்கு பாவிக்கப்பட்டிருக்கிறது. அதனை பாவிப்பதன் மூலமாக நிலத்திற்கு அடியிலே ஏதாவது அசாதாரணமான விடயங்கள் காணப்பட்டால் அல்லது அசைவுகள் இருந்தால் இந்த இயந்திரம் அதனை வெளிக்கொண்டு வரும் எனச் சொல்கிறார்கள்.


இதற்கமைய இன்றைய பரிசோதனையில் தரவுகள் பெறப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அந்த தரவுகளை ஆராய்ந்து அது எப்படியாக இருக்குமென்று அனுமானங்கள் செய்து இங்கு வேறு எந்த இடத்திலே மனித எலும்புக் கூடுகள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கிறது என்பதனை அறிந்து அந்தந்த இடங்களிலே அகழ்வுகளை செய்வார்கள். 


மனித புதைகுழியில்  இப்பொழுது 130 இற்கும் மேற்பட்ட எலும்புத் தொகுதிகளாக கண்டெடுக்கப்பட்ட இருக்கின்றன. இவ்வாறு ஒவ்வொருநாளும் இங்கு எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்படுகின்றன. 


இந்த மனித புதைகுழிகள் தோண்டப்படுகிற விடயம் உண்மை கண்டறியப்படுகிற செயன்முறையிலே மிகவும் முக்கியமான ஒரு பங்களிப்பைச் செலுத்துகிறது. 

இது மூடி மறைக்கப்படும் அல்லது அப்பொழுது செம்மணியிலே செய்துவிட்டு கைவிட்டது போல அப்படியே இதுவும் கைவிடப்படுமா அல்லது மன்னாரில் அல்லது கொக்குத்தொடுவாய் அல்லது மாத்தறையில் நடந்ததை போல  இருக்குமா என்று பலவிதமான சந்தேகங்கள் கேள்விகள் பலருக்கு இருக்கிறது. 


அது மட்டுமல்ல செம்மணி என்று சொன்னாலே சோமரட்ன ராஜபக்ச நீதிமன்றத்தில் கூறியதில் இருந்து எழுந்த அந்த விடயம் இப்பொழுது நிரூபணமாகி கொண்டு இருக்கிறது. 


நேற்றைய தினம் கூட செம்மணி தொடர்பில் சர்வதேச நீதிமன்றிலே சாட்சியமளிக்க தான தயார் என சொன்னதாக செய்திகள் வந்திருக்கிறது. அந்தச் செய்தி உண்மையானால் அதற்கு வழி செய்து கொடுக்க வேண்டும். 


சர்வதேச மன்று ஒன்றிலே அவரை நிறுத்தி அவருடைய கூற்றுக்களைப் பெற்று அவர் சொல்லுவதில் ஒத்துப் போகிறதான இந்தத் தடயங்களை கண்டுபிடிக்கிற விடயங்களை ஒத்துப் பார்க்கப்பட வேண்டும். இது மட்டுமல்ல. இது ஒரு திருப்புமுனையான சம்பவமாக நாங்கள் கருதுகிறோம். 


ஆகவே இதற்கான சான்றுகளை சேகரிக்கிற பொறிமுறைகள் விசேடமாக ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலே தற்பொழுது ஒஸ்லெப் என்ற பொறிமுறை இருக்கிறது. அதாவது சான்று பதிவு செய்வதும் பாதுகாப்பதுமான பொறிமுறை. அவை எல்லாம் வரவழைக்கப்பட்டு இங்கே நடந்த விடயங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.- என்றார்.

செம்மணி தொடர்பில் சாட்சியமளிக்க சோமரட்ன ராஜபக்ச தயார்; செய்தி உண்மையெனில் அரசாங்கம் வழி வகுக்க வேண்டும் - சுமந்திரன் செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச நீதிமன்றிலே சாட்சியமளிக்க தான் தயார் என சோமரட்ன ராஜபக்ச தெரிவித்திருந்தால் அதற்கு அரசாங்கம் வழி செய்து கொடுக்க வேண்டும் என்று சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழியில் அகழ்வை நேற்று நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனித புதைகுழி ஆய்வு நடைபெறுகிற இடத்திலே ஸ்கேனர் கருவி இன்றைக்கு பாவிக்கப்பட்டிருக்கிறது. அதனை பாவிப்பதன் மூலமாக நிலத்திற்கு அடியிலே ஏதாவது அசாதாரணமான விடயங்கள் காணப்பட்டால் அல்லது அசைவுகள் இருந்தால் இந்த இயந்திரம் அதனை வெளிக்கொண்டு வரும் எனச் சொல்கிறார்கள்.இதற்கமைய இன்றைய பரிசோதனையில் தரவுகள் பெறப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அந்த தரவுகளை ஆராய்ந்து அது எப்படியாக இருக்குமென்று அனுமானங்கள் செய்து இங்கு வேறு எந்த இடத்திலே மனித எலும்புக் கூடுகள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கிறது என்பதனை அறிந்து அந்தந்த இடங்களிலே அகழ்வுகளை செய்வார்கள். மனித புதைகுழியில்  இப்பொழுது 130 இற்கும் மேற்பட்ட எலும்புத் தொகுதிகளாக கண்டெடுக்கப்பட்ட இருக்கின்றன. இவ்வாறு ஒவ்வொருநாளும் இங்கு எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்படுகின்றன. இந்த மனித புதைகுழிகள் தோண்டப்படுகிற விடயம் உண்மை கண்டறியப்படுகிற செயன்முறையிலே மிகவும் முக்கியமான ஒரு பங்களிப்பைச் செலுத்துகிறது. இது மூடி மறைக்கப்படும் அல்லது அப்பொழுது செம்மணியிலே செய்துவிட்டு கைவிட்டது போல அப்படியே இதுவும் கைவிடப்படுமா அல்லது மன்னாரில் அல்லது கொக்குத்தொடுவாய் அல்லது மாத்தறையில் நடந்ததை போல  இருக்குமா என்று பலவிதமான சந்தேகங்கள் கேள்விகள் பலருக்கு இருக்கிறது. அது மட்டுமல்ல செம்மணி என்று சொன்னாலே சோமரட்ன ராஜபக்ச நீதிமன்றத்தில் கூறியதில் இருந்து எழுந்த அந்த விடயம் இப்பொழுது நிரூபணமாகி கொண்டு இருக்கிறது. நேற்றைய தினம் கூட செம்மணி தொடர்பில் சர்வதேச நீதிமன்றிலே சாட்சியமளிக்க தான தயார் என சொன்னதாக செய்திகள் வந்திருக்கிறது. அந்தச் செய்தி உண்மையானால் அதற்கு வழி செய்து கொடுக்க வேண்டும். சர்வதேச மன்று ஒன்றிலே அவரை நிறுத்தி அவருடைய கூற்றுக்களைப் பெற்று அவர் சொல்லுவதில் ஒத்துப் போகிறதான இந்தத் தடயங்களை கண்டுபிடிக்கிற விடயங்களை ஒத்துப் பார்க்கப்பட வேண்டும். இது மட்டுமல்ல. இது ஒரு திருப்புமுனையான சம்பவமாக நாங்கள் கருதுகிறோம். ஆகவே இதற்கான சான்றுகளை சேகரிக்கிற பொறிமுறைகள் விசேடமாக ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலே தற்பொழுது ஒஸ்லெப் என்ற பொறிமுறை இருக்கிறது. அதாவது சான்று பதிவு செய்வதும் பாதுகாப்பதுமான பொறிமுறை. அவை எல்லாம் வரவழைக்கப்பட்டு இங்கே நடந்த விடயங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement