2005 - 2014 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், ஜனாதிபதி நிதியத்திலிருந்து வெளிநாட்டில் கல்வி கற்பதற்காக அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களுக்கு மற்றும் நெருக்கமானவர்களுக்கு பல மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று வாய்மொழி மூல விடைக்கான கேள்வி நேரத்தில் முன்வைக்கப்பட்ட வினாக்களுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இவ்வாறு நிதியை பெற்றவர்கள் தொடர்பான தகவல்களை தாம் சபைக்கு சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்த அவர், அவர்களில் சிலரின் பெயர்களை நாடாளுமன்றில் அறிவித்தார்.
விசேடமாக 2005 ஆம் ஆண்டில் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத்சந்திர ராஜகருணாவினால் அவரது மகனான ஹர்ஷன சுபுன் ராஜ கருணாவின் உயர் கல்விக்காக நிதியை பெற்றுள்ளார்.
அதேபோல, 2006 ஆம் ஆண்டில், கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாசேன கொடித்துவக்கு தமது உறவினரான ஐ.என்.கொடித்துவக்கு என்பவருக்காக நிதியைப் பெற்றுள்ளார்.
2006 ஆம் ஆண்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக (தேசியப் பட்டியல்) இருந்த வீ. ராதாகிருஷ்ணன், திருமதி கே. ராதாகிருஷ்ணன் என்பவருக்காக நிதியை பெற்றுக்கொடுத்துள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், மேலும் பலரும் இவ்வாறு நிதியை பெற்றுள்ளதாகவும் அவர்களுக்காக பல மில்லியன் ரூபாய் ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேநேரம், புலமைப்பரிசில் பெற்று வெளிநாடுகளுக்காக கல்விகற்பதற்கு சென்று நாடு திரும்பாதவர்கள் தொடர்பில் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் அருண கருணாதிலக்க தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் வீ.ராதாகிருஷ்ணன் தாம் அல்லவெனவும், குறித்த காலப்பகுதியிலோ அதற்கு முன்னதாகவோ தாம் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் குறிப்பிடும் காலப்பகுதியில் தமது பெயரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இருந்தமையினால் அவரது பெயருக்கு பதிலாக தமது பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருக்கலாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
உறவினர்களுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற அரசியல்வாதிகள் - அமைச்சர் பகிரங்கம் 2005 - 2014 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், ஜனாதிபதி நிதியத்திலிருந்து வெளிநாட்டில் கல்வி கற்பதற்காக அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களுக்கு மற்றும் நெருக்கமானவர்களுக்கு பல மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.நாடாளுமன்றில் இன்று வாய்மொழி மூல விடைக்கான கேள்வி நேரத்தில் முன்வைக்கப்பட்ட வினாக்களுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.இவ்வாறு நிதியை பெற்றவர்கள் தொடர்பான தகவல்களை தாம் சபைக்கு சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்த அவர், அவர்களில் சிலரின் பெயர்களை நாடாளுமன்றில் அறிவித்தார்.விசேடமாக 2005 ஆம் ஆண்டில் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத்சந்திர ராஜகருணாவினால் அவரது மகனான ஹர்ஷன சுபுன் ராஜ கருணாவின் உயர் கல்விக்காக நிதியை பெற்றுள்ளார்.அதேபோல, 2006 ஆம் ஆண்டில், கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாசேன கொடித்துவக்கு தமது உறவினரான ஐ.என்.கொடித்துவக்கு என்பவருக்காக நிதியைப் பெற்றுள்ளார்.2006 ஆம் ஆண்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக (தேசியப் பட்டியல்) இருந்த வீ. ராதாகிருஷ்ணன், திருமதி கே. ராதாகிருஷ்ணன் என்பவருக்காக நிதியை பெற்றுக்கொடுத்துள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.அத்துடன், மேலும் பலரும் இவ்வாறு நிதியை பெற்றுள்ளதாகவும் அவர்களுக்காக பல மில்லியன் ரூபாய் ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.அதேநேரம், புலமைப்பரிசில் பெற்று வெளிநாடுகளுக்காக கல்விகற்பதற்கு சென்று நாடு திரும்பாதவர்கள் தொடர்பில் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் அருண கருணாதிலக்க தெரிவித்தார்.இதேவேளை, குறித்த பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் வீ.ராதாகிருஷ்ணன் தாம் அல்லவெனவும், குறித்த காலப்பகுதியிலோ அதற்கு முன்னதாகவோ தாம் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.அமைச்சர் குறிப்பிடும் காலப்பகுதியில் தமது பெயரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இருந்தமையினால் அவரது பெயருக்கு பதிலாக தமது பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருக்கலாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.