நெடுந்தீவில் தொல்பொருள் சுவடியை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை இன்று (6) முன்னெடுக்கப்பட்டது.
நெடுந்தீவில் வெடியரசன் கோட்டை வீதி புனரமைப்பின் போது தொல்பொருள் சின்னமாக அடையாளமிடப்பட்டிருந்த பகுதி சேதமாக்கப்பட்டதால் நேற்றையதினம் சாரதிகள் இருவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்ட்டிருந்தனர்.
அத்துடன் இதன் தொடர்ச்சியான நடவடிக்கைக்காக துறைசார் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கையின் பிரகாரம் யாழ் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் யாழ் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு இன்று மாலை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அதனையடுத்து சந்தேகநபர்களை ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
நெடுந்தீவு வெடியரசன் கோட்டை தமிழ் மன்னனின் வரலாற்றுடன் தொடர்புடையது என தெரிவிக்கப்படும் நிலையில் சில வருடங்களுக்கு முன்பு குறித்த பகுதி பௌத்த வரலாற்றுடன் தொடர்புடைய பகுதி என கடற்படையினரால் பதாகை போடப்பட்டு சர்ச்சை எழுந்த நிலையில் அந்த பதாகை நீக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியிலே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவில் தொல்பொருள் சின்னத்தின் சுவடி சேதம்; தவிசாளர் , ஒப்பந்ததாரர் அதிரடியாகக் கைது நெடுந்தீவில் தொல்பொருள் சுவடியை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை இன்று (6) முன்னெடுக்கப்பட்டது. நெடுந்தீவில் வெடியரசன் கோட்டை வீதி புனரமைப்பின் போது தொல்பொருள் சின்னமாக அடையாளமிடப்பட்டிருந்த பகுதி சேதமாக்கப்பட்டதால் நேற்றையதினம் சாரதிகள் இருவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்ட்டிருந்தனர்.அத்துடன் இதன் தொடர்ச்சியான நடவடிக்கைக்காக துறைசார் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கையின் பிரகாரம் யாழ் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் யாழ் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு இன்று மாலை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதனையடுத்து சந்தேகநபர்களை ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நெடுந்தீவு வெடியரசன் கோட்டை தமிழ் மன்னனின் வரலாற்றுடன் தொடர்புடையது என தெரிவிக்கப்படும் நிலையில் சில வருடங்களுக்கு முன்பு குறித்த பகுதி பௌத்த வரலாற்றுடன் தொடர்புடைய பகுதி என கடற்படையினரால் பதாகை போடப்பட்டு சர்ச்சை எழுந்த நிலையில் அந்த பதாகை நீக்கப்பட்டிருந்தது.இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியிலே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.