• Jan 07 2025

பல்வேறு பலவீனங்களை போக்க புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் – பேராயர் கர்தினால்

Chithra / Jan 6th 2025, 11:21 am
image

 

ஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு புதிய அரசியலமைப்பு அவசியமானது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் ஊழலை விசாரிப்பதற்கான வலுவான பொறிமுறையை ஏற்படுத்த புதிய அரசியலமைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கும் கொழும்பு பேராயருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (5) பிற்பகல் இடம்பெற்றதை அடுத்து, கர்தினால் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான தகவல்களை வெளியிடுவது மிகவும் முக்கியம்.

இதை யார் செய்தார்கள், என்ன காரணத்திற்காக, யாருடைய உதவியோடு செய்தார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் இலங்கையில் இதுபோன்ற பல விடயங்கள் நடந்துள்ளன.

கொலைகள், காணாமல் போதல்கள், போன்ற பல விடயங்கள் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.

ஜனநாயகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த தேவையான பொறிமுறையை தயார் செய்ய வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.

அதற்கு தேவையான அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

தற்போதுள்ள அரசியலமைப்பில் உள்ள பல்வேறு பலவீனங்களை போக்க புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பல்வேறு பலவீனங்களை போக்க புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் – பேராயர் கர்தினால்  ஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு புதிய அரசியலமைப்பு அவசியமானது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் ஊழலை விசாரிப்பதற்கான வலுவான பொறிமுறையை ஏற்படுத்த புதிய அரசியலமைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.நாடாளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கும் கொழும்பு பேராயருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (5) பிற்பகல் இடம்பெற்றதை அடுத்து, கர்தினால் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான தகவல்களை வெளியிடுவது மிகவும் முக்கியம்.இதை யார் செய்தார்கள், என்ன காரணத்திற்காக, யாருடைய உதவியோடு செய்தார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.கடந்த காலங்களில் இலங்கையில் இதுபோன்ற பல விடயங்கள் நடந்துள்ளன.கொலைகள், காணாமல் போதல்கள், போன்ற பல விடயங்கள் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.ஜனநாயகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த தேவையான பொறிமுறையை தயார் செய்ய வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.அதற்கு தேவையான அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.தற்போதுள்ள அரசியலமைப்பில் உள்ள பல்வேறு பலவீனங்களை போக்க புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement