கொட்டகலையில் மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொட்டகலை பிரதேசத்தில் குடுஓயா கிராமசேவகர் பிரிவில், 475 ஏ, கொட்டகலை கொமர்ஷலில் அமைந்துள்ள கடைக்கு முன்பாக கொட்டகலையிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் ஹட்டனிலிருந்து கொட்டகலை நோக்கி பயணித்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த, ஸ்டோன்கிளிப் தோட்டம், கொட்டகலை பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞன் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புலபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நேருக்கு நேர் மோதிய கார்- மோட்டார் சைக்கிள்; இளைஞன் படுகாயம். கொட்டகலையில் மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கொட்டகலை பிரதேசத்தில் குடுஓயா கிராமசேவகர் பிரிவில், 475 ஏ, கொட்டகலை கொமர்ஷலில் அமைந்துள்ள கடைக்கு முன்பாக கொட்டகலையிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் ஹட்டனிலிருந்து கொட்டகலை நோக்கி பயணித்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த, ஸ்டோன்கிளிப் தோட்டம், கொட்டகலை பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞன் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புலபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.