• Jan 07 2025

யானையை துண்டுதுண்டாக வெட்டி குளத்தில் வீசிய இராணுவத்தினர் வவுனியாவில் கைது

Chithra / Jan 6th 2025, 11:23 am
image

 

வவுனியா, ஓமந்தைப் பகுதியிலுள்ள இராணுவ முகாமொன்றில் மின்சாரம் தாக்கி இறந்த யானையை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசியதாக மூன்று இராணுவ வீரர்கள் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, ஓமந்தை, கொம்புவைத்தகுளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் மின்சாரம் தாக்கி யானை ஒன்று கடந்த மாதம் இறந்துள்ளது.

இறந்த யானையை இராணுவத்தினர் துண்டு துண்டாக வெட்டி குளத்திற்குள் வீசியதாகவும் அதன் உடற்பாகங்கள் குளத்தில் காணப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தையடுத்து வனஜீவராசிகள் திணைக்கள் மற்றும் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த விசாரணைகளையடுத்து மூன்று இராணுவ வீரர்கள் நேற்றுமுன்தினம்(04) வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மூவரையும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

யானையை துண்டுதுண்டாக வெட்டி குளத்தில் வீசிய இராணுவத்தினர் வவுனியாவில் கைது  வவுனியா, ஓமந்தைப் பகுதியிலுள்ள இராணுவ முகாமொன்றில் மின்சாரம் தாக்கி இறந்த யானையை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசியதாக மூன்று இராணுவ வீரர்கள் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வவுனியா, ஓமந்தை, கொம்புவைத்தகுளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் மின்சாரம் தாக்கி யானை ஒன்று கடந்த மாதம் இறந்துள்ளது.இறந்த யானையை இராணுவத்தினர் துண்டு துண்டாக வெட்டி குளத்திற்குள் வீசியதாகவும் அதன் உடற்பாகங்கள் குளத்தில் காணப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தையடுத்து வனஜீவராசிகள் திணைக்கள் மற்றும் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.குறித்த விசாரணைகளையடுத்து மூன்று இராணுவ வீரர்கள் நேற்றுமுன்தினம்(04) வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மூவரையும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement