• Sep 05 2025

அரிசி மாபியா சோதனையில் பல மில்லியன் வருவாய் ஈட்டிய இலங்கை

Aathira / Sep 5th 2025, 7:12 pm
image

அரிசி மாபியாவை ஒடுக்க மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மூலம் அரசுக்கு 95 மில்லியன் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 

கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

இந்த வருடம் ஆரம்பித்து இதுவரையில்  2,800 அரிசி சோதனைகள் இடம்பெற்றுள்ளன.

இவற்றில், 915 சோதனைகள் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வது தொடர்பில் இடம்பெற்றுள்ளது.

இந்த அரிசி சோதனைகள் தொடர்பாக நீதிமன்றங்களால் 95 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்து இருப்புகளை மறைத்து வைக்கும் வர்த்தகர்களை அடையாளம் காண்பதற்கு, 

அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து சோதனைகள், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரிசி மாபியா சோதனையில் பல மில்லியன் வருவாய் ஈட்டிய இலங்கை அரிசி மாபியாவை ஒடுக்க மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மூலம் அரசுக்கு 95 மில்லியன் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த வருடம் ஆரம்பித்து இதுவரையில்  2,800 அரிசி சோதனைகள் இடம்பெற்றுள்ளன.இவற்றில், 915 சோதனைகள் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வது தொடர்பில் இடம்பெற்றுள்ளது.இந்த அரிசி சோதனைகள் தொடர்பாக நீதிமன்றங்களால் 95 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்து இருப்புகளை மறைத்து வைக்கும் வர்த்தகர்களை அடையாளம் காண்பதற்கு, அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து சோதனைகள், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement