• Sep 05 2025

கந்தளாயில் துப்பாக்கியுடன் தொழிலதிபர் உட்பட இருவர் கைது!

Chithra / Sep 5th 2025, 1:31 pm
image

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் தொழிலதிபரும் அவரது வாகன சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

119 அவசர பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கந்தளாய் பொலிஸ் குழு தொழிலதிபரின் வீட்டில் சோதனை நடத்தியது. 

விசாரணையில், கைத்துப்பாக்கி அவரது சாரதியின் வீட்டில் இருப்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து தம்பலகாமம் பகுதியில் உள்ள சாரதியின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒரு ரிவால்வர் மற்றும் நான்கு தோட்டாக்கள் மீட்கப்பட்டன.

பின்னர் தொழிலதிபரின் கந்தளாய் வீட்டைச் சோதனை செய்தபோது, 66 பழைய தோட்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

சந்தேக நபர்கள் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

நீதிவான், இருவரையும் 48 மணித்தியாலங்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


கந்தளாயில் துப்பாக்கியுடன் தொழிலதிபர் உட்பட இருவர் கைது கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் தொழிலதிபரும் அவரது வாகன சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.119 அவசர பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கந்தளாய் பொலிஸ் குழு தொழிலதிபரின் வீட்டில் சோதனை நடத்தியது. விசாரணையில், கைத்துப்பாக்கி அவரது சாரதியின் வீட்டில் இருப்பது தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து தம்பலகாமம் பகுதியில் உள்ள சாரதியின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒரு ரிவால்வர் மற்றும் நான்கு தோட்டாக்கள் மீட்கப்பட்டன.பின்னர் தொழிலதிபரின் கந்தளாய் வீட்டைச் சோதனை செய்தபோது, 66 பழைய தோட்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.சந்தேக நபர்கள் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிவான், இருவரையும் 48 மணித்தியாலங்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement