மாத்தறை - ஹக்மனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதுவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூதாட்டி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹக்மனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹக்மனை, பதுவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய மூதாட்டி ஒருவரே கொலைசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று, மூதாட்டி தனது வீட்டிற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தானம் ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.
இதன்போது, தானம் வழங்கும் இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நபரொருவர், வீட்டுக்கு உறவினர்கள் வந்திருப்பதாக கூறி மூதாட்டியை அங்கிருந்து அழைத்துச் சென்று கூரிய ஆயுதத்தால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிவந்துள்ளது.
மூதாட்டியின் சடலம் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் ஹக்மனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் கொடூரமாக கொல்லப்பட்ட மூதாட்டி; மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் நடந்த பயங்கரம் மாத்தறை - ஹக்மனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதுவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூதாட்டி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹக்மனை பொலிஸார் தெரிவித்தனர்.இந்த கொலை சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஹக்மனை, பதுவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய மூதாட்டி ஒருவரே கொலைசெய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று, மூதாட்டி தனது வீட்டிற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தானம் ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.இதன்போது, தானம் வழங்கும் இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நபரொருவர், வீட்டுக்கு உறவினர்கள் வந்திருப்பதாக கூறி மூதாட்டியை அங்கிருந்து அழைத்துச் சென்று கூரிய ஆயுதத்தால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிவந்துள்ளது.மூதாட்டியின் சடலம் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த கொலை சம்பவம் தொடர்பில் ஹக்மனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.