• Nov 22 2024

அரச வைத்தியசாலைகளில் தரமற்ற மருந்துகள் பாவனையிலா..? சுகாதார அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Chithra / Sep 2nd 2024, 8:29 am
image

 

அரச வைத்தியசாலைகளில் தரமற்ற மருந்துகள் இல்லை. எனவே அச்சமின்றி மருந்துகளை பயன்படுத்துமாறும் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன அறிவுறுத்தியுள்ளார்.

மருந்துகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுகாதார அமைச்சு அவசரகால மருந்துகளை கொள்வனவு செய்யாது எனவும், தான் சுகாதார அமைச்சராகப் பணியாற்றும் வரையிலும், இந்த அதிகாரிகள் பணிபுரியும் வரையிலும், சட்ட விரோதமான அல்லது பாரம்பரியத்துக்கு விரோதமான செயல்களில் ஈடுபடமாட்டேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"கொள்முதல் நடவடிக்கையின் மூலம் தரம் குறைந்த மருந்துகள் எதுவும் வாங்கப்படாது. இலங்கையில் பதிவு செய்யப்படாத மருந்துகள் எந்த சூழ்நிலையிலும் இலங்கைக்கு கொண்டு வரப்படாது. 

மருந்துகள் மற்றும் உற்பத்தியாளர்கள் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு இலங்கையில் பல மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவியது. சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட 862 மருந்துகள் இலங்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மருந்துகளின் தரம் குறித்து எந்தப் பிரச்சினையும் வராது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

அரச வைத்தியசாலைகளில் தரமற்ற மருந்துகள் பாவனையிலா. சுகாதார அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு  அரச வைத்தியசாலைகளில் தரமற்ற மருந்துகள் இல்லை. எனவே அச்சமின்றி மருந்துகளை பயன்படுத்துமாறும் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன அறிவுறுத்தியுள்ளார்.மருந்துகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும், சுகாதார அமைச்சு அவசரகால மருந்துகளை கொள்வனவு செய்யாது எனவும், தான் சுகாதார அமைச்சராகப் பணியாற்றும் வரையிலும், இந்த அதிகாரிகள் பணிபுரியும் வரையிலும், சட்ட விரோதமான அல்லது பாரம்பரியத்துக்கு விரோதமான செயல்களில் ஈடுபடமாட்டேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்."கொள்முதல் நடவடிக்கையின் மூலம் தரம் குறைந்த மருந்துகள் எதுவும் வாங்கப்படாது. இலங்கையில் பதிவு செய்யப்படாத மருந்துகள் எந்த சூழ்நிலையிலும் இலங்கைக்கு கொண்டு வரப்படாது. மருந்துகள் மற்றும் உற்பத்தியாளர்கள் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஆண்டு இலங்கையில் பல மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவியது. சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட 862 மருந்துகள் இலங்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மருந்துகளின் தரம் குறித்து எந்தப் பிரச்சினையும் வராது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement