கொழும்பில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தரை மடையன் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா திட்டும் காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது.
கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காணப்படும் பேருந்து நிறுத்தும் பகுதியில் காரை நிறுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை அப்போது கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸார் விளக்கம் கோரியுள்ளனர்.
இதன்போது காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என கேட்ட கேள்விக்கு
'காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது, மடையன்' என திட்டடிவிட்டு காரை ஓட்டிச் செல்லும் காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது.
இலங்கை வீதி கோவை சட்டத்துக்கு அமைய பேருந்து நிறுத்துமிட்டத்தில் இருந்து ஒரு வாகனம் சரியாக 20 மீ்ற்றருக்கு அப்பாலே நிறுத்தப்படவேண்டும். எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் பேருந்து தரிப்பிடத்திலேயே வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குறித்த பகுதியில் தனது காரை நிறுத்தியது மாத்திரமல்லாது, கடமையில் ஈடுபட்ட அதிகாரியிடம் முரணாக பதில் வழங்கியமை தற்போது பேசுபொருளாகியுள்ளது.
காரை இங்கே நிறுத்தாமல்; உங்கள் தலையிலா நிறுத்துவது. பொலிசாரை மடையன் என திட்டிய அர்ச்சுனா கொழும்பில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தரை மடையன் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா திட்டும் காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது.கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காணப்படும் பேருந்து நிறுத்தும் பகுதியில் காரை நிறுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை அப்போது கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸார் விளக்கம் கோரியுள்ளனர்.இதன்போது காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என கேட்ட கேள்விக்கு 'காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது, மடையன்' என திட்டடிவிட்டு காரை ஓட்டிச் செல்லும் காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது.இலங்கை வீதி கோவை சட்டத்துக்கு அமைய பேருந்து நிறுத்துமிட்டத்தில் இருந்து ஒரு வாகனம் சரியாக 20 மீ்ற்றருக்கு அப்பாலே நிறுத்தப்படவேண்டும். எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் பேருந்து தரிப்பிடத்திலேயே வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குறித்த பகுதியில் தனது காரை நிறுத்தியது மாத்திரமல்லாது, கடமையில் ஈடுபட்ட அதிகாரியிடம் முரணாக பதில் வழங்கியமை தற்போது பேசுபொருளாகியுள்ளது.