பருத்தித்துறை தியாகி திலீபன் நினைவிடத்தில் தியாக தீபம் திலீபனின் 38 வது நினைவேந்தல் வடமராட்சி மக்களால் அனுஸ்டிக்கப்பட்டது.
முதல் நிகழ்வாக பொது ஈகைச் சுடரினை மாவீரர் லெப்டினென்ட் தென்றலின் சகோதரரும், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவருமான சி.வேந்தன் ஏற்றிவைக்க மலர்மாலையினை பருத்தித்துறை நகரசபையின் தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ்போல் அணிவித்ததை தொடர்ந்து பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெ.ஜயகோபி, காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இ.முரளிதரன் ஆகியோர் அணிவித்தனர்.
இதில் ஆயுள்வேத மருத்துவரும், தமிழ் மக்கள் கூட்டணி வடமராட்சி அமைப்பாளருமான சிவகுமார், காணி உரிமைக்கான இயக்க தலைவர் இ.முரளிதரன், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் சுரேஸ்குமார், உட்பட பலரும் கலந்துகொண்டு தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபனின் 38 வது நினைவேந்தல் அனுஸ்டிப்பு பருத்தித்துறை தியாகி திலீபன் நினைவிடத்தில் தியாக தீபம் திலீபனின் 38 வது நினைவேந்தல் வடமராட்சி மக்களால் அனுஸ்டிக்கப்பட்டது.முதல் நிகழ்வாக பொது ஈகைச் சுடரினை மாவீரர் லெப்டினென்ட் தென்றலின் சகோதரரும், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவருமான சி.வேந்தன் ஏற்றிவைக்க மலர்மாலையினை பருத்தித்துறை நகரசபையின் தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ்போல் அணிவித்ததை தொடர்ந்து பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெ.ஜயகோபி, காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இ.முரளிதரன் ஆகியோர் அணிவித்தனர்.இதில் ஆயுள்வேத மருத்துவரும், தமிழ் மக்கள் கூட்டணி வடமராட்சி அமைப்பாளருமான சிவகுமார், காணி உரிமைக்கான இயக்க தலைவர் இ.முரளிதரன், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் சுரேஸ்குமார், உட்பட பலரும் கலந்துகொண்டு தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.