• Mar 29 2025

தோட்டாவுடன் ஜனாதிபதி செயலகத்திற்குள் புகுந்து பரபரப்பை ஏற்படுத்திய இராணுவ வீரர் கைது

Chithra / Mar 26th 2025, 9:09 am
image

 

ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முயன்ற இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனது பையில் துப்பாக்கி தோட்டாவை மறைத்து வைத்துக்கொண்டு நுழைய முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவ சமிக்ஞைப் படையில் கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சந்தேக நபரான சிப்பாய் ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றுகிறார்.

கடந்த 20 ஆம் திகதி, அவர் விடுமுறை பெற்று லுனுகம்வெஹெரவில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று மீண்டும் பணிக்கு வந்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் பொது நுழைவாயிலுக்கு அருகில் சிப்பாயின் பையை சரிபார்க்க ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் ஸ்கேனர் ஒன்றைப் பயன்படுத்தினர்.

பையில் T-56 துப்பாக்கிக்கான தோட்டா கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தோட்டாவுடன் ஜனாதிபதி செயலகத்திற்குள் புகுந்து பரபரப்பை ஏற்படுத்திய இராணுவ வீரர் கைது  ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முயன்ற இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தனது பையில் துப்பாக்கி தோட்டாவை மறைத்து வைத்துக்கொண்டு நுழைய முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவ சமிக்ஞைப் படையில் கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரான சிப்பாய் ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றுகிறார்.கடந்த 20 ஆம் திகதி, அவர் விடுமுறை பெற்று லுனுகம்வெஹெரவில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று மீண்டும் பணிக்கு வந்துள்ளார்.ஜனாதிபதி செயலகத்தின் பொது நுழைவாயிலுக்கு அருகில் சிப்பாயின் பையை சரிபார்க்க ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் ஸ்கேனர் ஒன்றைப் பயன்படுத்தினர்.பையில் T-56 துப்பாக்கிக்கான தோட்டா கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement