வங்காள விரிகுடாவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை திரும்ப முடியாமல் இந்தியாவை அண்மித்த கடற்பகுதியில் தங்கியுள்ள இலங்கையின் 25 பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு இந்தியப் பிராந்தியக் கடற்பரப்பிற்குள் நுழைவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக இலங்கை அரசாங்கம் விடுத்த விசேட கோரிக்கைக்கு அமைய, இந்திய அரசாங்கம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
வங்காள விரிகுடாவில் தீவிரமடைந்துள்ள 'அர்னாப்' புயல் காரணமாகக் கடலில் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், மீனவர்களின் உயிர்களையும் படகுகளையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்தியாவை அண்மித்த கடற்பகுதியில் தங்கியுள்ள இலங்கை மீன்பிடிப் படகுகள், ஆபத்தான கடற்பகுதிகளிலிருந்து வெளியேறி இந்தியப் பிராந்தியக் கடற்பரப்பிற்குள் பாதுகாப்பாகச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.
மேலும், குறித்த படகுகளின் உரிமையாளர்களுக்கு தற்போதைய சூழ்நிலையில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் நாட்டைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளுக்குப் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு அடுத்த 12 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு - மத்திய வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலவிய 'அர்னாப்' தீவிர புயல் மேலும் வலுவடைந்து 'மிகத் தீவிர புயலாக' மாற்றமடைந்து இன்று (27) அதிகாலை 02.30 மணியளவில் வட அகலாங்கு 15.9 மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.4 க்கு அருகில், அதாவது காங்கேசன்துறையில் இருந்து சுமார் 890 கி.மீ வடகிழக்கு திசையில் மையம் கொண்டிருந்தது.
இது இன்று (27) பி.ப. 05.30 மணி வரை மேற்கு - வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதுடன், அதன்பின்னர் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை முற்பகல் 11.30 மணியளவில் ஆந்திரப் பிரதேச கடற்கரையினூடாக இந்திய கரையை கடக்கவுள்ளதாக என எதிர்பார்க்கப்படுகிறது.
எச்சரிக்கை வகைக்குள் அடங்கும் கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 80 -140 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், பலத்த இடிமின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.
அத்துடன், இக்கடல் பகுதிகளில் அலைகளின் உயரமானது சுமார் (3.0 - 4.0) மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதுடன், இக்கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
எனவே, அந்த கடல் பகுதிகளில் மறுஅறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும், அப்பகுதிகளில் ஏற்கனவே மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி நகருமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்துகிறது.
அர்னாப் புயலின் கோரத்தாண்டவம் – நடுக்கடலில் தவிக்கும் இலங்கை மீனவர்கள் இந்தியா எடுத்த தீர்மானம் வங்காள விரிகுடாவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை திரும்ப முடியாமல் இந்தியாவை அண்மித்த கடற்பகுதியில் தங்கியுள்ள இலங்கையின் 25 பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு இந்தியப் பிராந்தியக் கடற்பரப்பிற்குள் நுழைவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக இலங்கை அரசாங்கம் விடுத்த விசேட கோரிக்கைக்கு அமைய, இந்திய அரசாங்கம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.வங்காள விரிகுடாவில் தீவிரமடைந்துள்ள 'அர்னாப்' புயல் காரணமாகக் கடலில் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், மீனவர்களின் உயிர்களையும் படகுகளையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, இந்தியாவை அண்மித்த கடற்பகுதியில் தங்கியுள்ள இலங்கை மீன்பிடிப் படகுகள், ஆபத்தான கடற்பகுதிகளிலிருந்து வெளியேறி இந்தியப் பிராந்தியக் கடற்பரப்பிற்குள் பாதுகாப்பாகச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.மேலும், குறித்த படகுகளின் உரிமையாளர்களுக்கு தற்போதைய சூழ்நிலையில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.இந்நிலையில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் நாட்டைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளுக்குப் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு அடுத்த 12 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு - மத்திய வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலவிய 'அர்னாப்' தீவிர புயல் மேலும் வலுவடைந்து 'மிகத் தீவிர புயலாக' மாற்றமடைந்து இன்று (27) அதிகாலை 02.30 மணியளவில் வட அகலாங்கு 15.9 மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.4 க்கு அருகில், அதாவது காங்கேசன்துறையில் இருந்து சுமார் 890 கி.மீ வடகிழக்கு திசையில் மையம் கொண்டிருந்தது.இது இன்று (27) பி.ப. 05.30 மணி வரை மேற்கு - வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதுடன், அதன்பின்னர் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை முற்பகல் 11.30 மணியளவில் ஆந்திரப் பிரதேச கடற்கரையினூடாக இந்திய கரையை கடக்கவுள்ளதாக என எதிர்பார்க்கப்படுகிறது.எச்சரிக்கை வகைக்குள் அடங்கும் கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 80 -140 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், பலத்த இடிமின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.அத்துடன், இக்கடல் பகுதிகளில் அலைகளின் உயரமானது சுமார் (3.0 - 4.0) மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதுடன், இக்கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.எனவே, அந்த கடல் பகுதிகளில் மறுஅறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும், அப்பகுதிகளில் ஏற்கனவே மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி நகருமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்துகிறது.