இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் வருகை முடிந்து திரும்பும் போது விமான நிலையத்தில் இலங்கை தேயிலையை நினைவுப் பரிசாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர முன்மொழிந்துள்ளார்.
அதன்படி, சிலோன் டீயின் பெயரை உலகில் பிரபலப்படுத்தும் நோக்கில், இலங்கைக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகளுக்கும் இலங்கை தேயிலை பொருட்கள் அடங்கிய நினைவுப் பரிசு வழங்கப்படவுள்ளது.
தேயிலை கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த யோசனையை முன்வைத்தார்.
இக்கலந்துரையாடலில் இலங்கை தேயிலை சபை, சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, தேயிலை தோட்டக்காரர்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் தேயிலை தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அதேவேளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தேயிலையை நினைவு பரிசுகளாக வழங்கும் யோசனைக்கு தேயிலை கைத்தொழில் துறையினர் இணக்கம் தெரிவித்ததுடன், அதற்கு பங்களிக்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
இதற்கான செலவை தேயிலை வாரியமும், தனியாரும் ஏற்க வேண்டும் எனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேயிலையை நினைவுப் பரிசாக வழங்க ஏற்பாடு. இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் வருகை முடிந்து திரும்பும் போது விமான நிலையத்தில் இலங்கை தேயிலையை நினைவுப் பரிசாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர முன்மொழிந்துள்ளார்.அதன்படி, சிலோன் டீயின் பெயரை உலகில் பிரபலப்படுத்தும் நோக்கில், இலங்கைக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகளுக்கும் இலங்கை தேயிலை பொருட்கள் அடங்கிய நினைவுப் பரிசு வழங்கப்படவுள்ளது.தேயிலை கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த யோசனையை முன்வைத்தார்.இக்கலந்துரையாடலில் இலங்கை தேயிலை சபை, சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, தேயிலை தோட்டக்காரர்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் தேயிலை தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.அதேவேளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தேயிலையை நினைவு பரிசுகளாக வழங்கும் யோசனைக்கு தேயிலை கைத்தொழில் துறையினர் இணக்கம் தெரிவித்ததுடன், அதற்கு பங்களிக்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சரிடம் தெரிவித்தனர்.இதற்கான செலவை தேயிலை வாரியமும், தனியாரும் ஏற்க வேண்டும் எனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.