வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அதிகளவான பண மோசடிச் சம்பவங்கள் அண்மைக்காலங்களில் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த மோசடிகள் லட்சங்களில் ஆரம்பித்து பல கோடிகள் வரையில் நீடிக்கின்றன.
வெளிநாட்டுப் பயணம், காணி விற்பனை, இணையவழி ஏமாற்று, பகுதிநேர வேலை வாய்ப்பு என இந்த மோசடிகள் பல பரிணாமங்களில் புத்துயிர் பெறுகின்றது.
ஏமாறுவோர் இருக்கும் வரையில் ஏமாற்றுவோர் இருக்கத் தான் செய்வார்கள்.
யாழ் மாவட்டத்தில் நாளாந்தம் வெளியாகும் மோசடிச் சம்பவங்கள் பற்றிய செய்திகளைப் பார்க்கும்போது எதிர்கால சந்ததியினரின் வாழ்கை எவ்வாறு செல்ல போகின்றது என்ற எண்ணம் தோன்றுகின்றது.
மோசடிகள் தொடர்பாக பல எச்சரிக்கைகள் விழிப்புணர்வுத் தகவல்கள் பாதுகாப்புத் தரப்புகளாலும் ஊடகங்களாலும் வழங்கப்பட்டும் கூட மோசடியாளர்களிடம் சிக்கித் தவிப்போர் ஏராளம்.
இவ்வாறான மோசடிகளுக்கு முதற்காரணம் மனிதர்களின் பேராசை. அதைப் பயன்படுத்தியே மோசடியாளர்கள் தங்கள் காரியத்தைக் கச்சிதமாக முடித்துக்கொள்கின்றனர்.
அதீத ஆசையால் மோசடியாளர்களின் கவர்ச்சி வார்த்தைகளுக்கு மயங்கி பணத்தைப் பறிகொடுக்கின்றனர்.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் வரையில் இவ்வாறான மோசடிகளைத் தடுப்பது இயலாத காரியமே. பொலிஸாரும், ஏனையோரும் மோசடியாளர்களைக் கைது செய்தாலும், ஏமாறுவோர் இருக்கும் வரையில் இவ்வாறான மோசடிகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
தொழில்நுட்ப வளர்ச்சி உச்சம் கண்டுள்ள தற்காலத்தில் எவரும் எதையும் உருவாக்க முடியும் என்ற நிலைமையே இருக்கின்றது. இதுவும் மக்களின் ஏமாற்றத்திற்கு ஒரு காரணமாகும்.
சமீபத்தில் கூட தன்னை மருத்துவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு மோசடி செய்த குற்றச்சாட்டில் 29 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
அவரை நம்பி பலர் ஏமாந்திருக்கிறார்கள். இவ்வாறு இன்னும் பலர் ஏமாற்றப்பட்டிருக்கலாம்.
இது ஒரு சமீபத்திய உதாரணம் மட்டுமே. இவ்வாறான பல மோசடிச் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
பணத்தை இழந்து விட்டு பின்னர் பொலிஸ் நிலையத்துக்கு அலைவதாலும் பொலிஸ் தரப்பைக் குறைகூறுவதாலும் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டாலும் இழந்த பணமோ பொருளோ மீண்டும் உடனே கிடைத்துவிடும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.
அதனால் சிந்தித்துச் செயற்படுவதே ஆபத்தில் இருந்து எம்மை காப்பதோடு எமது எதிர்கால இளம் தலைமுறையினரையும் காப்பாற்ற முடியும். அதை உணர்ந்து மக்கள் செயற்படுவது மட்டுமே இவ்வாறான மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி.
ஆகவே அணைத்து மக்களும் சிந்தியுங்கள் உழைத்து வாழ வேண்டுமே தவிர பிறருடைய உழைப்பில் வாழக்கூடாது அந்த வாழ்கை நிலைப்பதும் இல்லை. ஒருவர் பணம் இலவசமாக தருகிறார் என்பதற்காக அவர் பின்னால் ஓடுமளவிற்கு இன்றைய சமுதாயம் மாறுகின்றது.
அதனால் இருப்பவன் மிதிக்கின்றான். மிதிக்கப்படுவதற்காக நம் படைக்கப்படவில்லை. ஒவொருவரும் ஏதோ ஒருவகையில் தனித்துவமானவர்கள் யாரையும் ஏமாற்றாமலும் யாரிடமும் ஏமாறாமலும் நம்பிக்கையோடு பயணிப்போம். வாழ்கை ஒருமுறை அதை மகிழ்ச்சியாக வாழ்ந்திடுவோம்...
ஏமாறுவோர் இருக்கும்வரை ஏமாற்றமே நிரந்தரம். வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அதிகளவான பண மோசடிச் சம்பவங்கள் அண்மைக்காலங்களில் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த மோசடிகள் லட்சங்களில் ஆரம்பித்து பல கோடிகள் வரையில் நீடிக்கின்றன. வெளிநாட்டுப் பயணம், காணி விற்பனை, இணையவழி ஏமாற்று, பகுதிநேர வேலை வாய்ப்பு என இந்த மோசடிகள் பல பரிணாமங்களில் புத்துயிர் பெறுகின்றது.ஏமாறுவோர் இருக்கும் வரையில் ஏமாற்றுவோர் இருக்கத் தான் செய்வார்கள். யாழ் மாவட்டத்தில் நாளாந்தம் வெளியாகும் மோசடிச் சம்பவங்கள் பற்றிய செய்திகளைப் பார்க்கும்போது எதிர்கால சந்ததியினரின் வாழ்கை எவ்வாறு செல்ல போகின்றது என்ற எண்ணம் தோன்றுகின்றது. மோசடிகள் தொடர்பாக பல எச்சரிக்கைகள் விழிப்புணர்வுத் தகவல்கள் பாதுகாப்புத் தரப்புகளாலும் ஊடகங்களாலும் வழங்கப்பட்டும் கூட மோசடியாளர்களிடம் சிக்கித் தவிப்போர் ஏராளம்.இவ்வாறான மோசடிகளுக்கு முதற்காரணம் மனிதர்களின் பேராசை. அதைப் பயன்படுத்தியே மோசடியாளர்கள் தங்கள் காரியத்தைக் கச்சிதமாக முடித்துக்கொள்கின்றனர். அதீத ஆசையால் மோசடியாளர்களின் கவர்ச்சி வார்த்தைகளுக்கு மயங்கி பணத்தைப் பறிகொடுக்கின்றனர். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் வரையில் இவ்வாறான மோசடிகளைத் தடுப்பது இயலாத காரியமே. பொலிஸாரும், ஏனையோரும் மோசடியாளர்களைக் கைது செய்தாலும், ஏமாறுவோர் இருக்கும் வரையில் இவ்வாறான மோசடிகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். தொழில்நுட்ப வளர்ச்சி உச்சம் கண்டுள்ள தற்காலத்தில் எவரும் எதையும் உருவாக்க முடியும் என்ற நிலைமையே இருக்கின்றது. இதுவும் மக்களின் ஏமாற்றத்திற்கு ஒரு காரணமாகும். சமீபத்தில் கூட தன்னை மருத்துவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு மோசடி செய்த குற்றச்சாட்டில் 29 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.அவரை நம்பி பலர் ஏமாந்திருக்கிறார்கள். இவ்வாறு இன்னும் பலர் ஏமாற்றப்பட்டிருக்கலாம். இது ஒரு சமீபத்திய உதாரணம் மட்டுமே. இவ்வாறான பல மோசடிச் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.பணத்தை இழந்து விட்டு பின்னர் பொலிஸ் நிலையத்துக்கு அலைவதாலும் பொலிஸ் தரப்பைக் குறைகூறுவதாலும் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டாலும் இழந்த பணமோ பொருளோ மீண்டும் உடனே கிடைத்துவிடும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. அதனால் சிந்தித்துச் செயற்படுவதே ஆபத்தில் இருந்து எம்மை காப்பதோடு எமது எதிர்கால இளம் தலைமுறையினரையும் காப்பாற்ற முடியும். அதை உணர்ந்து மக்கள் செயற்படுவது மட்டுமே இவ்வாறான மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி.ஆகவே அணைத்து மக்களும் சிந்தியுங்கள் உழைத்து வாழ வேண்டுமே தவிர பிறருடைய உழைப்பில் வாழக்கூடாது அந்த வாழ்கை நிலைப்பதும் இல்லை. ஒருவர் பணம் இலவசமாக தருகிறார் என்பதற்காக அவர் பின்னால் ஓடுமளவிற்கு இன்றைய சமுதாயம் மாறுகின்றது. அதனால் இருப்பவன் மிதிக்கின்றான். மிதிக்கப்படுவதற்காக நம் படைக்கப்படவில்லை. ஒவொருவரும் ஏதோ ஒருவகையில் தனித்துவமானவர்கள் யாரையும் ஏமாற்றாமலும் யாரிடமும் ஏமாறாமலும் நம்பிக்கையோடு பயணிப்போம். வாழ்கை ஒருமுறை அதை மகிழ்ச்சியாக வாழ்ந்திடுவோம்.