ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் வைத்து தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நலீம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக குறித்த பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் வைத்து தமது தந்தை மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அது தொடர்பில் விசாரிப்பதற்கு சென்ற தமது சகோதரர் மீதும் தாக்குதல் நடத்தபட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நலீம் தெரிவித்தார்.
இந்தநிலையில் அவர்களை பார்வையிடுவதற்காக தாம் வைத்தியசாலைக்கு சென்ற போது அவர்களை தாக்கிய தரப்பினர் தம்மை தூற்றியதாக அவர் குறிப்பிட்டார்.
பின்னர் இது தொடர்பில் முறைப்பாடளிப்பதற்காக ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு சென்ற நிலையில் அங்கு தம்மீது ஒருவர் தலைக்கவசத்தினால் தாக்குதல் நடத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நலீம் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நலீம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குறிப்பிட்டார்.
இரு தரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் மாத்திரமே ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் வைத்து தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நலீம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.முன்னதாக குறித்த பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் வைத்து தமது தந்தை மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அது தொடர்பில் விசாரிப்பதற்கு சென்ற தமது சகோதரர் மீதும் தாக்குதல் நடத்தபட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நலீம் தெரிவித்தார்.இந்தநிலையில் அவர்களை பார்வையிடுவதற்காக தாம் வைத்தியசாலைக்கு சென்ற போது அவர்களை தாக்கிய தரப்பினர் தம்மை தூற்றியதாக அவர் குறிப்பிட்டார்.பின்னர் இது தொடர்பில் முறைப்பாடளிப்பதற்காக ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு சென்ற நிலையில் அங்கு தம்மீது ஒருவர் தலைக்கவசத்தினால் தாக்குதல் நடத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நலீம் தெரிவித்தார்.எவ்வாறாயினும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நலீம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குறிப்பிட்டார். இரு தரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் மாத்திரமே ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.