• Nov 23 2024

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு...! பயனாளிகளுக்கான முக்கிய அறிவித்தல்...!samugammedia

Sharmi / Dec 28th 2023, 10:22 am
image

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும நலன்புரித் திட்டத்தினூடாக இதுவரை 5ஆயிரத்து 196 கோடியே 70 இலட்சம் ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், அஸ்வெசும நலத்திட்ட உதவித் திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பணிகள் எதிர்வரும் மாசி மாதத்தின்  முதல் வாரத்தில் ஆரம்பமாகும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

அதேவேளை,  அஸ்வெசும நன்மைகள் திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து கிராம அலுவலர்களுக்கும் மாதாந்த கொடுப்பனவாக 2500 ரூபா வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், அஸ்வெசும நலன் திட்டத்திற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் தை மாதம் மீண்டும் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதேவேளை, உரிய முறையில் விண்ணப்பங்களை அனுப்ப முடியாத தரப்பினர் தொடர்பில் கவனம் செலுத்தி ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய மீண்டும் விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு. பயனாளிகளுக்கான முக்கிய அறிவித்தல்.samugammedia கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும நலன்புரித் திட்டத்தினூடாக இதுவரை 5ஆயிரத்து 196 கோடியே 70 இலட்சம் ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறானதொரு நிலையில், அஸ்வெசும நலத்திட்ட உதவித் திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பணிகள் எதிர்வரும் மாசி மாதத்தின்  முதல் வாரத்தில் ஆரம்பமாகும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.அதேவேளை,  அஸ்வெசும நன்மைகள் திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து கிராம அலுவலர்களுக்கும் மாதாந்த கொடுப்பனவாக 2500 ரூபா வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.அத்துடன், அஸ்வெசும நலன் திட்டத்திற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் தை மாதம் மீண்டும் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அதேவேளை, உரிய முறையில் விண்ணப்பங்களை அனுப்ப முடியாத தரப்பினர் தொடர்பில் கவனம் செலுத்தி ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய மீண்டும் விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement