ஹைதி கடலோரப் பகுதியில் அகதிகளை அதிகளவில் ஏற்றி வந்த படகு தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் உயிரிழந்தனர்.
81 பேரை ஏற்றிக் கொண்டு அந்தப் படகு ஹைதியில் இருந்து பிரித்தானிய அதிகாரத்திற்கு உட்பட்ட Turks and Caicos தீவுகள் நோக்கிச் சென்றது.
இதன் போது, படகில் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹைதி கடலோரக் காவல்படையினர் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு 41 பேரை மீட்ட நிலையில் 40 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதியில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் சுகாதார பிரச்சினைகளால் அங்கிருந்து வெளியேறும் அகதிகளை ஏற்றிச் செல்லும் படகுகள் தடுக்கப்பட்டதால் இது போன்ற சட்டவிரோதமான படகுகள் மூலமாக அகதிகள் வெளியேற முயற்சிக்கின்றனர்
ஹைதி கடலோரப் பகுதியில் அகதிகளுடன் தீப்பற்றிய கப்பல் – 40 பேர் பலி ஹைதி கடலோரப் பகுதியில் அகதிகளை அதிகளவில் ஏற்றி வந்த படகு தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் உயிரிழந்தனர்.81 பேரை ஏற்றிக் கொண்டு அந்தப் படகு ஹைதியில் இருந்து பிரித்தானிய அதிகாரத்திற்கு உட்பட்ட Turks and Caicos தீவுகள் நோக்கிச் சென்றது.இதன் போது, படகில் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஹைதி கடலோரக் காவல்படையினர் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு 41 பேரை மீட்ட நிலையில் 40 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹைதியில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் சுகாதார பிரச்சினைகளால் அங்கிருந்து வெளியேறும் அகதிகளை ஏற்றிச் செல்லும் படகுகள் தடுக்கப்பட்டதால் இது போன்ற சட்டவிரோதமான படகுகள் மூலமாக அகதிகள் வெளியேற முயற்சிக்கின்றனர்